சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா.. 9 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதும் விஜய் -அஜித் படங்கள்!
சென்னை : நடிகர்கள் அஜித் -விஜய் இருவரும் கோலிவுட் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகர்களாக உள்ளனர்.
இவர்கள் இருவரின் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு திருவிழாக் கொண்டாட்டத்தை தந்து வருகின்றன.
இதனிடையே இந்த பொங்கல் பண்டிகையையொட்டி இவர்கள் இருவரின் படங்களும் ரிலீசாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் இரட்டை கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

மாஸ் ஹீரோக்கள்
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். இருவரும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தங்களுடைய கேரியரை தமிழில் துவங்கிய நிலையில், இருவருக்கும் சமமான ரசிகர்கள் வட்டம் காணப்படுகின்றன. சமயத்தில் இரு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் அடித்துக் கொள்ளும் சம்பவங்களும் காணப்படுகின்றன.

பொங்கலுக்கு வெளியாகும் அஜித் -விஜய் படங்கள்
இவர்கள் இருவரின் படங்கள் தனித்தனியாக வெளியாகும்போதே அந்தப் படத்தின் குறைகளை ஹைலைட் செய்து மற்ற தரப்பினர் கமெண்ட் செய்துவரும் நிலையில், இந்த பொங்கலையொட்டி இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளன. விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் இந்தப் பொங்கலுக்கு வெளியாகவுள்ளன.

9 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ்
கடந்த 2014ம் ஆண்டில் இவர்கள் இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியான நிலையில் அதை தொடர்ந்து இருவரின் படங்களும் கடந்த 9 ஆண்டுகளாக ஒரே நேரத்தில் வெளியாகாமல் உள்ளன. இதனிடையே வரும் பொங்கலையொட்டி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாகவுள்ளது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

இறுதிக்கட்டத்தில் வாரிசு படம்
விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு பெற்றுள்ளது. படத்தில் இன்னும் 2 பைட் சீன்கள் மற்றும் 2 பாடல்களின் சூட்டிங் மட்டுமே மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு பெறவுள்ளது. சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

சூட்டிங் நிறைவடைந்த துணிவு படம்
இதனிடையே, ஐதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் அஜித்தின் துணிவு படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாக பாங்காக்கில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், படத்தின் சூட்டிங் இன்று முழுமையாக நிறைவு பெறவுள்ளது. படத்தின் பைட் சீன்கள் உள்ளிட்டவை இன்றைய தினம் படமாக்கப்பட்டன.

ஜனவரி 12ல் விஜய் படம் ரிலீஸ்?
இதையடுத்து படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் வாரிசு படம் பொங்கலையொட்டி ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதைக்களங்கள்
இந்த இரண்டு படங்களும் வித்தியாசமான ஜானர்களில் உருவாகியுள்ளன. விஜய்யின் வாரிசு படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. அதில் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடியும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அஜித்தின் படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. பேங்க் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











