விஷால் – ஆர்யாவின் எனிமி ரெடி... எப்போது ரிலீஸ் தெரியுமா ?

சென்னை : இரண்டு டாப் ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் வர துவங்கி விட்டன. அதிலும் ஒருவர் ஹீரோ கேரக்டரிலும், மற்றொருவர் வில்லன் ரோலிலும் நடிப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியும், மாதவனும் இணைந்து நடித்ததை தமிழ் ரசிகர்கள் ரசித்து, அந்த படத்தை ஹிட் ஆக்கினர். இதே போல் மாஸ்டர் படத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்தனர். இந்த படம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அந்த வரிசையில் தற்போது விஷால் - ஆர்யா நடித்துள்ள எனிமி படமும் ரிலீசாக உள்ளது.

வில்லனான ஆர்யா

வில்லனான ஆர்யா

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடித்துள்ள எனிமி படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருக்கும் விஷாலும், ஆர்யாவும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆனந்த் சங்கர் இயக்கி உள்ள இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்துள்ளார் ஆர்யா.

மிரட்டல் டீசர்

மிரட்டல் டீசர்

2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த படத்தின் வேலைகள், ஜுலை மாதம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்புகள் முடிந்ததை அடுத்து, ஜுலை 24 ம் தேதி எனிமி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. மிரட்டலாக வெளியான இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

துபாய், சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்ட எனிமி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதனால் இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு உலகம் முழுவதும் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

இரண்டு நாட்களுக்கு முன் விஷால் தனது போர்ஷனுக்கான டப்பிங் வேலைகளை துவக்கி உள்ளார். மினி ஸ்டூடியோஸ் பேனரில் எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ள எனிமி படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி ட்விட்டரில் அறிவித்துள்ளது.

தெலுங்கு, இந்தியிலும் ரிலீஸ்

தெலுங்கு, இந்தியிலும் ரிலீஸ்

அதே தேதியில் தசரா பண்டிகை கொண்டாடப்படுவதால் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் எனிமி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். விஷாலுக்கு தெலுங்கிலும் ரசிகர் கூட்டம் உள்ளதாலும், சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பல மொழிகளிலும் தெரிந்த ஹிரோவாக ஆர்யாவும் மாறி உள்ளதால் தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே நாளில் இந்தியிலும் எனிமி என்ற பெயரிலேயே இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

பிற நடிகர்கள்

பிற நடிகர்கள்

எனிமி படத்தில் விஷால், ஆர்யா தவிர மிருனாளிணி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். மேலும் எஸ்.தமன் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.

Recommended Video

வீட்டுக்கு போனா கைய தூக்க முடியாது | Sarpatta | Actor Arya Exclusive | Filmibeat Tamil
இந்த நாளில் டிரைலரா

இந்த நாளில் டிரைலரா

படத்தின் ஒட்டுமொத்த வேலைகளும் முடிந்து, ரிலீஸ் தேதியும் உறுதியாகி விட்டதால் படத்தின் டிரைலரை விரைவில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10 அன்று எனிமி டிரைலர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X