இப்படி ஆகும்னு நினைக்கல..அந்த நிகழ்ச்சிக்கு போனதுதான் தப்பு.. காணாமல் போன நடிகர்கள்!
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்தியில் முதலில் ஒளிபரப்பை தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 16 சீசன்களை நிறைவு செய்துள்ளது.
தமிழில் இதுவரை ஆறு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரை சாக்ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஹரீஷ் கல்யாண், லாஸ்லியா, தர்ஷன்,கவின் போன்றவர்கள் மட்டுமே ஓரளவுக்கு பிரபலமாகி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தால், பிரபலமாகலாம், பெயர் கிடைக்கும் என்று நினைத்துவந்தவர்களில் படவாய்ப்பே இல்லாமல் காணாமலே போய்விட்டார்கள்.

நடிகர் சக்தி : தென்னிந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பி வாசுவின் மகன் தான் ஷக்தி. இவர் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் இவரின் படங்கள் பெயர் சொல்லாததால், மக்கள் மனதில் இடம் பிடிக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், நிகழ்ச்சியில் ஓவியா குறித்து அவர் தெரிவித்த ஒரு கருத்தால், மோசமான விமர்சனத்திற்கு உள்ளார். வெளியே வந்த சக்தி பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் படவாய்ப்பே இல்லாமல் போனது.

நடிகை ஓவியா : தமிழ் சினிமாவில் கலகலப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா களவாணி படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். ஒரு சில படங்களில் கதையை சரியாக தேர்வு செய்யாததால், பட வாய்ப்பை இழந்த இவர், படவாய்பை பெற பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அந்த நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ஓவியாவுக்கு படவாய்ப்பு சரியாக அமையாமல் போனது தான் வேதனை.

பரணி: நடிகர் பரணி, கல்லூரி, நாடோடிகள் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரை ரசிகர்களுக்கு தெரிந்த முகமான இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால்,மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் படவாய்ப்பு வரும் என்று நம்பி போன பரணி, அங்கு மனரீதியாக பாதிக்கப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் பொட்டு, நாடோடிகள் 2 படத்தில் நடித்த அவருக்கு பட வாய்ப்புகள் வராமலே போனது

நடிகர் ஆரி : பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை தட்டி சென்ற ஆரிக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லை. ஆரி அறிமுகமான முதல் பட பாரதிராஜா, பாலச்சந்தர் நடித்த படமாக இருந்ததால் இவரின் நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது. பிக் பாஸ் டைட்டிலை வென்று மக்களின் மனங்களை வென்ற ஆரிக்கு படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது நடிப்பில் கடந்த ஆண்டு நெஞ்சுக்கு நீதி என்ற படம் மட்டுமே வெளியானது.

நடிகை மதுமிதா: ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற நகைச்சுவை படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்த பிரபலமானார் மதுமிதா. இந்தபடத்திற்கு பின் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து பீக்கில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார். இதையடுத்து மன அழுத்தத்திற்கு உள்ளான மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்து, பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இவர் எதிர்பார்த்து போனது ஒன்னு ஆனால், அங்கு நடந்தது ஒன்றாக மாறியதால், தற்போது எந்த படங்களும் இல்லாமல் இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











