லாக்டவுனும் முடியல...ஷுட்டிங்கும் நடக்கல...விவசாயிகளாகும் நடிகர்கள்

சென்னை : கொரோனா, லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் ஏற்கனவே துவங்கிய படங்களையும் முடிக்க முடியவில்லை. புதிதாக படம் துவங்க முடியவில்லை. லாக்டவுன் தளர்வுகள் வந்தாலும் மீண்டும் லாக்டவுன் வந்தால் என்ன செய்வது என்ற அச்சத்தால் பலரும் புதிய படங்களை துவக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்ட பெரிய படங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் செய்யப்படாமலும், ரிலீஸ் எப்போது என தெரியாமலும் முடங்கி கிடக்கின்றன. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் வரிசையாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு இருப்பதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா என தெரியவில்லை.

திரையுலகமே முடங்கி போய் உள்ள நிலையில் நடிகர், நடிகைகள் வீட்டிலேயே தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகின்றனர். அப்படி தாங்கள் லாக்டவுன் சமயத்தில் என்ன செய்கிறோம் என்பதை சமூக வலைதளங்களில் ஃபோட்டோவாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு, ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

நடிகர், நடிகைகள் என்ன செய்கிறார்கள்

நடிகர், நடிகைகள் என்ன செய்கிறார்கள்

நடிகைகள் பலர் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி வருகிறார். சிலர் யோகா, சமையல், தோட்ட பராமரிப்பு, செல்ல நாய்களுடன் கொஞ்சி விளையாடுவது போன்றவைகள் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் நேரடியாக களத்தில் இறங்கி ஏழைகளுக்கு உணவு வழங்குவது போன்ற சமூக பணிகளை செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டம்

சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டம்

சமீபத்தில் மாடி தோட்டத்தில் பொழுதை கழிப்பதை வீடியோவாக வெளியிட்டிருந்தார் நடிகை சுகாசினி. இந்நிலையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன், இசிஆர்.,ல் தான் புதிதாக வாங்கிய வீட்டில் தோட்டம் அமைத்து அதை பராமரிப்பதை வீடியோ மற்றும் ஃபோட்டோவாக வெளியிட்டுள்ளார். என் வீட்டு தோட்டத்தில் என குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

வயல்வெளியில் யோகிபாபு

வயல்வெளியில் யோகிபாபு

இந்நிலையில் இன்று நடிகர் யோகிபாபுவும் வேட்டி சட்டையில் வயல்வெளியில் நிற்பது போன்ற ஃபோட்டோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன் அருண்விஜய், பரத் போன்ற நடிகர்களும் வீட்டு தோட்டத்தை பராமரிப்பது, செடிகள் நடுவது போன்ற ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.

கவனத்தை ஈர்க்கும் விவசாயம்

கவனத்தை ஈர்க்கும் விவசாயம்

சினிமா வேலைகள் எப்போதும் துவங்கும் என தெரியவில்லை. துவங்கினாலும் கொரோனா பயத்தை மீறி எப்படி படப்பிடிப்பிற்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளதால், நடிகர்கள் பலரின் கவனம் விவசாயம் பக்கம் திரும்பி உள்ளது. சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வீட்டிற்கு தேவையான காய்கறி, கீரை வகைகளை வீட்டிலேயே விளைய வைத்து வருகின்றனர்.

நிரந்தர வேலை தரும் விவசாயம்

நிரந்தர வேலை தரும் விவசாயம்

கொரோனா பலரின் தொழில்களை முடக்கினாலும் இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த விவசாயிகளின் பக்கம் பலரின் கவனத்தை திருப்பி உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை. கொரோனா, லாக்டவுன் என எது வந்தாலும் எப்போதும் நிச்சயம் வேலை இருக்கும் என்பதால் நடிகர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களின் கவனமும் விவசாயம் பக்கம் திரும்பி உள்ளது. இது நல்ல மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X