நிழல் உலக தாதாக்களால் மிரட்டப்பட்ட நடிகர், நடிகைகள்

By Siva

மும்பை: நிழல் உலக தாதாக்களால் மிரட்டப்பட்ட பாலிவுட் நடிகர், நடிகைகள் யார், யார் என்று பார்ப்போம்.

தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா பாலியல் புகார் கொடுத்தார். இந்நிலையில் நிழல் உலக தாதா ரவி பூஜாரி நெஸ் வாடியாவின் தந்தையும், வாடியா குழும தலைவருமான நுஸ்லி வாடியாவுக்கு போன் செய்து ப்ரீத்தி விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டால் நல்லது இல்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் நிழல் உலக தாதாக்களால் மிரட்டப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் பற்றி பார்ப்போம்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கானை நிழல் உலக தாதாக்கள் பல முறை மிரட்டியுள்ளனர். 2002ம் ஆண்டு தாதா சோட்டா ஷகீல் ஒரு குறிப்பிட்ட இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்று ஷாருக்கானை மிரட்டியுள்ளார். அதன் பிறகு தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான தாதா அபு சலீம் ஷாருக்கானுக்கு பலமுறை போன் செய்து தனது படங்களில் நடிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

சல்மான் கான்

சல்மான் கான்

2002ம் ஆண்டில் தன்னை நிழல் உலக தாதாக்கள் மிரட்டுவதாக நடிகர் சல்மான் கான் போலீசில் புகார் கொடுத்தார். கடந்த பிப்ரவரி மாதம் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியில் சல்மான் கானை நிழல் உலக தாதா ரவி பூஜாரி மிரட்டி பணம் கேட்டதாகவும், அது குறித்து அவர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

கடந்த ஆண்டு நடிகர் அக்ஷய் குமாருக்கு போன் செய்த ஒருவர் தன்னை தாதா ரவி பூஜாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உங்கள் வீட்டு வேலைக்காரரை பணிநீக்கம் செய்தது தவறு என்று கூறியுள்ளார் ரவி. முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அக்ஷய் தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததால் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கோவிந்தா

கோவிந்தா

கடந்த 2006ம் ஆண்டில் நடிகர் கோவிந்தாவுக்கு நிழல் உலக ஆட்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக அவரது சகோதரர் தெரிவித்தார். இது குறித்து கோவிந்தா போலீசார் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சோனு நிகம்

சோனு நிகம்

பிரபல இந்தி பாடகரான சோனு நிகாம் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். தான் ஒரு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு தாங்கள் கூறும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று தாதா தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமான சோட்டா ஷகீல் தன்னை மிரட்டியதாக அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

சோரி சோரி சுப்கே சுப்கே படத்தில் நடிக்கையில் தனக்கு நிழல் உலக ஆட்கள் மிரட்டல் விடுத்ததாக நடிகை ப்ரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்த படத்தை நிழல் உலக ஆட்கள் தயாரித்ததாக அப்போது கூறப்பட்டது.

கரண் ஜோஹார்

கரண் ஜோஹார்

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் மற்றும் நடிகர் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரும் நிழல் உலக ஆட்களால் மிரட்டப்பட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X