»   »  நடிகர் சங்க அரசியல்

நடிகர் சங்க அரசியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜயகாந்தின் பதவி காலம் முடிவதையொட்டி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது.

விஜயகாந்த் தலைமையில் 11ம் தேதி நடிகர் சங்க தேர்தல் தேதியை முடிவு செய்யவதற்காக நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது. இதில் கிட்டத்தட்ட 300 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

பொது கூட்டத்தில் தேர்தல் தேதி, வேட்பு மனுதாக்கல் தேதி போன்றவை பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுஅறிவிக்கப்படும். தேர்தல் ஆகஸ்டு மாதம் நடக்குமென எதிர் பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த் இரண்டுமுறை தலைவராகி விட்டார். மேலும் தேமுதிக என்ற கட்சி தொடங்கி அரசியலில்குதித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட உள்ளதால்மீண்டும் தலைவர் பதவிக்கு நிற்க மாட்டார் என்று தெரிகிறது.


ஆனால் அவருடைய ஆதரவு நடிகர்கள் மீண்டும் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என வற்புறுத்திவருகின்றனர். விஜயகாந்த் தலைமையில் நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டதாக அவர்கள்சுட்டிகாட்டுகின்ளனர்.

இதற்கிடையில் புதிய தலைவராக யார் வருவார் என்று பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது. நடிகர் சரத்குமார்தற்போது நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ளார். நெப்போலியன், ராதாரவி, எஸ்எஸ் சந்திரன் ஆகியோர்துணைத் தலைவர்களாக உள்ளனர். இவர்களில் யாரவது ஒருவர் தலைவர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.இதில் நடிகர் பிரவு பெயரும் அடிபடுகிறது.

நடிகர் சங்கத்தில் திமுக, அதிமுக நடிகர்களும் பொறுப்பில் இருப்பதால் இவர்களும் தலைவர் பதவிக்குகுறிவைக்கிறார்கள். எனவே நடிகர் சங்க தலைவர் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil