»   »  அட்வைஸ் அன்புமணி

அட்வைஸ் அன்புமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

குளிர்பான விளம்பரங்களில் நடிகர், நடிகைகள் விளையாட்டு வீரர்கள் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரஅமைச்சர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி சுகாதாரம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவரதுஅமைச்சகம் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு தடை விதித்துள்ளது.


குளிர்பானங்களில் கரியமில வாயு கலந்துள்ளது. இதை குடிப்பதால் குழந்தைகளின் உடல் பாதிக்கப்படுகிறது. குளிர்பானவிளம்பரங்களில் நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், சூர்யா, மாதவன், நடிகை ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் வீரர்கள்தெண்டுல்கர், ஷேவாக் போன்ற பிரபலங்கள் நடிப்பதால் குளிர்பானங்கள் பிரபலமாகின்றன.

இதனால் நிறைய குழந்தைகள் குளிர்பானங்களை வாங்கி குடிக்கின்றனர். இதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்பதிக்கபடுகிறது. இதனை கருத்தில் கொண்டு நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் குளிர்பான விளம்பரங்களில் நடிப்பதைகட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர்கள் தங்கள் ஊதியத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ள நிலையில்,நடிகர்களுக்கு இன்னொரு கோரிக்கை அதே கட்சியில் இருந்து வந்துள்ளது.

Read more about: anbumanis advice to actors

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil