»   »  நிலச்சரிவு: ஊட்டியில் தவித்த நடிகர், நடிகையர் ஊட்டி அருகே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பிய மது படக் குழுவினர் நிலச் சரிவு காரணமாக மலைப் பாதையில்24 மணி நேரம் தவித்தனர். அடை மழையும், புயல் காற்றும் வீசியதால் பெருத்த பீதியுடன், காருக்குள்ளேயே அவர்கள்அடைபட்டுக் கிடந்தனர். மது என்ற படத்தின் படப்பிடிப்பு ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள நடுவட்டம் என்ற இடத்தில் நடந்தது.இதற்காக நடிகர்கள் ரமேஷ், ப்ரியாமணி, ஆசிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி உள்பட 120 பேர் அடங்கியகுழுவினர் ஊட்டி சென்றிருந்தனர். முதல் நாள் படப்பிடிப்பு காலை 9 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. பிற்பகல் 1 மணிக்கு மேல் சூறாவளிக்காற்றும், பலத்த மழையும் பெய்யத் தொடங்கியதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அனைவரும் ஊட்டிக்குக் கிளம்பினர்கள். கார்களில் அவர்கள் வந்தபோது,மலைப் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள், பாறைகள் கீழே விழுந்து கிடந்ததால் அவர்களால்மேற்கொண்டு போக முடியவில்லை. இதனால் நடுச் சாலையில் அனைவரும் கார்களுக்குள் அடைபட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களைப் போலவே பலரும்நடுச் சாலையில் சிக்கிக் கொண்டனர். விடிய விடிய கார்களுக்குள், சாப்பாடு கூட இல்லாமல் அவதிப்பட்டுக் கிடந்த அவர்கள் அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு மேல்தான் போக்குவரத்து சரியாகி கிளம்ப முடிந்தது. கிட்டத்தட்ட 24 மணி நேரமாக பெருத்த பீதியுடன் கார்களுக்குள் சிக்கிக் கிடந்த கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும்ஒரு வழியாக மீண்டு ஊட்டி வந்து சேர்ந்தனர். அங்கு சிறிது நேரம் தங்கிய பின்னர்,மேற்கொண்டு படப்பிடிப்பை கேரள மாநிலம் மாஹி பகுதியில் நடத்துவதற்காக அங்குபுறப்பட்டுச் சென்றனர்.

நிலச்சரிவு: ஊட்டியில் தவித்த நடிகர், நடிகையர் ஊட்டி அருகே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பிய மது படக் குழுவினர் நிலச் சரிவு காரணமாக மலைப் பாதையில்24 மணி நேரம் தவித்தனர். அடை மழையும், புயல் காற்றும் வீசியதால் பெருத்த பீதியுடன், காருக்குள்ளேயே அவர்கள்அடைபட்டுக் கிடந்தனர். மது என்ற படத்தின் படப்பிடிப்பு ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள நடுவட்டம் என்ற இடத்தில் நடந்தது.இதற்காக நடிகர்கள் ரமேஷ், ப்ரியாமணி, ஆசிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி உள்பட 120 பேர் அடங்கியகுழுவினர் ஊட்டி சென்றிருந்தனர். முதல் நாள் படப்பிடிப்பு காலை 9 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. பிற்பகல் 1 மணிக்கு மேல் சூறாவளிக்காற்றும், பலத்த மழையும் பெய்யத் தொடங்கியதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அனைவரும் ஊட்டிக்குக் கிளம்பினர்கள். கார்களில் அவர்கள் வந்தபோது,மலைப் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள், பாறைகள் கீழே விழுந்து கிடந்ததால் அவர்களால்மேற்கொண்டு போக முடியவில்லை. இதனால் நடுச் சாலையில் அனைவரும் கார்களுக்குள் அடைபட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களைப் போலவே பலரும்நடுச் சாலையில் சிக்கிக் கொண்டனர். விடிய விடிய கார்களுக்குள், சாப்பாடு கூட இல்லாமல் அவதிப்பட்டுக் கிடந்த அவர்கள் அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு மேல்தான் போக்குவரத்து சரியாகி கிளம்ப முடிந்தது. கிட்டத்தட்ட 24 மணி நேரமாக பெருத்த பீதியுடன் கார்களுக்குள் சிக்கிக் கிடந்த கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும்ஒரு வழியாக மீண்டு ஊட்டி வந்து சேர்ந்தனர். அங்கு சிறிது நேரம் தங்கிய பின்னர்,மேற்கொண்டு படப்பிடிப்பை கேரள மாநிலம் மாஹி பகுதியில் நடத்துவதற்காக அங்குபுறப்பட்டுச் சென்றனர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஊட்டி அருகே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பிய மது படக் குழுவினர் நிலச் சரிவு காரணமாக மலைப் பாதையில்24 மணி நேரம் தவித்தனர். அடை மழையும், புயல் காற்றும் வீசியதால் பெருத்த பீதியுடன், காருக்குள்ளேயே அவர்கள்அடைபட்டுக் கிடந்தனர்.

மது என்ற படத்தின் படப்பிடிப்பு ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள நடுவட்டம் என்ற இடத்தில் நடந்தது.இதற்காக நடிகர்கள் ரமேஷ், ப்ரியாமணி, ஆசிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி உள்பட 120 பேர் அடங்கியகுழுவினர் ஊட்டி சென்றிருந்தனர்.

முதல் நாள் படப்பிடிப்பு காலை 9 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. பிற்பகல் 1 மணிக்கு மேல் சூறாவளிக்காற்றும், பலத்த மழையும் பெய்யத் தொடங்கியதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.


இதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அனைவரும் ஊட்டிக்குக் கிளம்பினர்கள். கார்களில் அவர்கள் வந்தபோது,மலைப் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள், பாறைகள் கீழே விழுந்து கிடந்ததால் அவர்களால்மேற்கொண்டு போக முடியவில்லை.

இதனால் நடுச் சாலையில் அனைவரும் கார்களுக்குள் அடைபட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களைப் போலவே பலரும்நடுச் சாலையில் சிக்கிக் கொண்டனர்.

விடிய விடிய கார்களுக்குள், சாப்பாடு கூட இல்லாமல் அவதிப்பட்டுக் கிடந்த அவர்கள் அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு மேல்தான் போக்குவரத்து சரியாகி கிளம்ப முடிந்தது.

கிட்டத்தட்ட 24 மணி நேரமாக பெருத்த பீதியுடன் கார்களுக்குள் சிக்கிக் கிடந்த கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும்ஒரு வழியாக மீண்டு ஊட்டி வந்து சேர்ந்தனர்.

அங்கு சிறிது நேரம் தங்கிய பின்னர்,மேற்கொண்டு படப்பிடிப்பை கேரள மாநிலம் மாஹி பகுதியில் நடத்துவதற்காக அங்குபுறப்பட்டுச் சென்றனர்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil