குஷ்புவுக்கு ஆதரவாக துணை நடிகை, நடிகர்கள் சென்னை: நடிகை குஷ்புவுக்கு எதிராக நடிகர் சங்கம் முன்பு போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்குஎதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர், நடிகைகள் சுமார் 200 பேர் நடிகர் சங்க வளாகத்திற்குள், பலத்த போலீஸ்பாதுகாப்புடன், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டுக் கலைந்து சென்றனர்.கல்யாணம் ஆகாத இளம் பெண்களிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்கக் கூடாது என்ற புரட்சிகரமானகருத்தைத் தெரிவித்துள்ளார் குஷ்பு. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குஷ்புவைக் கண்டித்து நடிகர் சங்கம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், துடைப்பம்,செருப்பு உள்ளிட்டவற்றுடன் கூடி போராட்டம் நடத்தினர்.குஷ்புவைத் தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாமகவும்போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.இந் நிலையில், துணை நடிகர், நடிகையர் 200 பேர், நேற்றிரவு இரவு 8 மணியளவில் சங்க வளாகத்தில் குழுமினர். நடிகைகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் ஆபாசமாக பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து சிறிதுநேரம் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.இரவில் வந்து போராட்டம் நடத்தியது குறித்து அவர்களில் சிலர் கூறுகையில், கடந்த 53 வருடங்களாக இந்தநடிகர் சங்கம் இயங்கி வருகிறது. இதுவரை 5 முதல்வர்களைக் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட எங்களைப் பற்றிவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தரக்குறைவாக பேசியுள்ளனர்.இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குஷ்பு பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடிகர் சங்கசெயற்குழுக் கூடவுள்ளது.அப்போது இப்பிரச்சினை குறித்து விவாதிப்போம் என்றனர்.துணை நடிகர், நடிகையரின் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காகநிறுத்தப்பட்டிருந்தனர்.

By Staff

சென்னை:


நடிகை குஷ்புவுக்கு எதிராக நடிகர் சங்கம் முன்பு போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்குஎதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர், நடிகைகள் சுமார் 200 பேர் நடிகர் சங்க வளாகத்திற்குள், பலத்த போலீஸ்பாதுகாப்புடன், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டுக் கலைந்து சென்றனர்.

கல்யாணம் ஆகாத இளம் பெண்களிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்கக் கூடாது என்ற புரட்சிகரமானகருத்தைத் தெரிவித்துள்ளார் குஷ்பு. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குஷ்புவைக் கண்டித்து நடிகர் சங்கம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், துடைப்பம்,செருப்பு உள்ளிட்டவற்றுடன் கூடி போராட்டம் நடத்தினர்.

குஷ்புவைத் தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாமகவும்போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இந் நிலையில், துணை நடிகர், நடிகையர் 200 பேர், நேற்றிரவு இரவு 8 மணியளவில் சங்க வளாகத்தில் குழுமினர்.


நடிகைகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் ஆபாசமாக பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து சிறிதுநேரம் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

இரவில் வந்து போராட்டம் நடத்தியது குறித்து அவர்களில் சிலர் கூறுகையில், கடந்த 53 வருடங்களாக இந்தநடிகர் சங்கம் இயங்கி வருகிறது. இதுவரை 5 முதல்வர்களைக் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட எங்களைப் பற்றிவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தரக்குறைவாக பேசியுள்ளனர்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குஷ்பு பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடிகர் சங்கசெயற்குழுக் கூடவுள்ளது.அப்போது இப்பிரச்சினை குறித்து விவாதிப்போம் என்றனர்.

துணை நடிகர், நடிகையரின் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காகநிறுத்தப்பட்டிருந்தனர்.

Read more about: actors support kushboo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X