புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர்குட் சுப்பிரமணி மறைவு.. எல்லா முயற்சிகளும் வீணாபோச்சு.. திரைத்துறையில் சோகம்
சென்னை: நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு புற்றுநோய் நான்காவது ஸ்டேஜில் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர், இன்று அதாவது மே 10ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது, 58. இவரது உடல் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ளது. இன்று இரவு, மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை இறுதி மரியாதை நடைபெறவுள்ளது. அவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் தனது ஆரம்ப காலத்தில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்ததால், இவரது பெயருடன் சூப்பர் குட் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது. பெரும்பாலான காமெடி படங்கள், குணச்சித்திர படங்கள் என மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை உள்வாங்கி, சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்று பெயர் பெற்றவர்.
இவர் இயக்குநர் பா. ரஞ்சித்தின் காலா, மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், ஞானவேலின் ஜெய் பீம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேநேரத்தில் இவர் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில்தான் அதிகம் நடித்துள்ளார். அதேபோல் முண்டாசுப்பட்டி படத்தில் அட்டகாசமான நகைச்சுவைக கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இது மட்டும் இல்லாமல் பாமரன் என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரமாகவே நடித்திருப்பார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்ற தகவல் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
அதிர்ச்சி: புற்றுநோயில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்த பின்னர் சிகிச்சை மேற்கொண்டு வந்த காலத்திலேயே, தான் கடைசியாக நடித்த கமாண்டோவின் லவ் ஸ்டோரி படத்திற்கான டப்பிங்கை மிகவு சிரமப்பட்டு பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தது. தான் கமிட அன படத்தில் தனது அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்ததை பலரும் பாராட்டினார்கள். சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தகவல் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உதவி: இவரது குடும்ப சூழல் குறித்து தெரிந்து கொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், சிம்பு, கார்த்தி, சாந்தனு, சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி,விஜய் முத்து, பூச்சி முருகன், கே.பி.ஒய். பாலா, இயக்குநர் சங்கம், எழுத்தாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குநர் ஜவஹர் மித்ரன் மற்றும் வீர அன்பரசு உள்ளிட்ட பலர் இவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்தனர். நடிகர் கார்த்தி இவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இறுதிச் சடங்கு: நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு புற்றுநோய் நான்காவது ஸ்டேஜில் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர், இன்று அதாவது மே 10ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது, 58. இவரது உடல் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ளது. இன்று இரவு, மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை இறுதி மரியாதை நடைபெறவுள்ளது. அவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











