»   »  நடிகைக்கு ஊத்தி விட்டு நகை திருட்டு

நடிகைக்கு ஊத்தி விட்டு நகை திருட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி துணை நடிகையை ஏமாற்றி அவரிடமிருந்து நகையைபறித்துக் கொண்டு தப்பிய இரு வாலிபர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியை சேர்ந்த கலாராணி (28). பல திரைப்படங்கள், டிவி சீரியல்களில் துணை வடிகையாகநடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் இவரது செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் நாங்கள் விளப்பர படம்தயாரிக்கிறோம். இதில் நீங்கள் நடிக்க விருப்பினால் வட பழனியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் எங்களை சந்திகலாம்என்று கூறினார்.

கலாராணியும் அந்த விடுதிக்குச் சென்றார். அங்கு சங்கர், குரு என்ற இருவர் இருந்தனர். கலாராணியைப் பார்த்தஅவர்கள், ஏய் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று எடுத்து விட்டுள்ளனர்.

புளகாங்கிதம் அடைந்த கலாராணியும் அவர்கள் சொல்வதைக் கேட்க தயாரானார். இதையடுத்து மது புட்டியைஎடுத்த சங்கரும், குருவும், அதில் மதுவை ஊற்றி கலாராணியிடம் கொடுத்தனர். அய்யோ, வேண்டாம் என்றுமறுத்துள்ளார் கலாராணி. விடாத இரு பலே பார்ட்டிகளும், வற்புறுத்தி குடிக்க வைத்தனர். குடித்த கொஞ்சநேரத்திலேயே கலாராணி மயக்கமடைந்தார்.

மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த போது தான் அணிந்திருந்த 8 பவுன் நகைகள் திருடு போயிருந்ததைப் பார்த்துதிடுக்கிட்டார். உடனடியாக லாட்ஜ் ஊழியர்களிடம் சென்று கூறியுள்ளார். அவர்களோ எங்களுக்கு எதுவும்தெரியாது என்று கூறி விட்டனர்.

இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் கலாராணி. இதுகுறித்துவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more about: actress cheated in hotel

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil