ஓடிப்போன துணை நடிகை-ஏஜெண்டுக்கு வலைவீச்சு
சென்னையில் மாயமான நடிகை தீபா தன் காதலனுடன் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தீபா(16), வசந்தம் வந்தாச்சு, வம்புச்சண்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலர்கள், கிரிஜா எம்ஏ போன்ற டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இப்போது சிறுகதை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந் நிலையில் சிறுகதை படப்பிடிப்பிற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற தீபா வீடு திரும்பவில்லை.
இதையடுத்து தீபாவின் தந்தை தன் மகளை துணை நடிகர் ஏஜெண்டான தனநாயகம் கடத்தி சென்றுவிட்டார் என எம்பிகே போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது தெரிய வந்த விவரம்
நடிகை தீபா தனநாயகத்திடம் நீண்ட நாளாக பழகி வந்துள்ளார். மற்ற துணை நடிகைகளை விட தனநாயகம் தீபாவிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
இதனால் தீபாவிற்கு தனநாயகத்தின் மீது தனிப்பட்ட விருப்பம் ஏற்பட்டுள்ளது. அது காதலாகி மாறியது. தனநாயகத்துடன் தீபா பல இடங்களிலும் சுற்றியுள்ளார்.
தீபாவின் வீட்டிற்கு தனநாயகம் வந்ததினால் பிரச்சனை ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு தீபா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தனநாயகம் தீபாவை அழைத்துச் சென்று ஐயப்பன்தாங்கலில் உள்ள வீட்டில் வைத்துளளார்.
போலீஸார் தீவிரமாக தேடியது காரணமாக, அங்கிருந்து இருவரும் தப்பித்து திருப்பூருக்கு சென்றுள்ளனர்.
இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷ்னர் விமலா கூறுகையில்,
நடிகை தீபாவிற்கு 17 வயதுதான் ஆகிறது. அவரது விருப்பப்பட்டு காதலனுடன் சென்றாலும், பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபா மைனர் என்பதால அவரை திருமணம் செய்வதும், பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து செல்வதும் குற்றமாகும்.
அதனால் திருப்பூருக்கு சென்று அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்து திருப்பூருக்கு சென்றுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











