»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கேரளாவில் நள்ளிரவில் நடிகை விசித்ரா தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து அவரை கற்பழிக்க முயன்றார் தெலுங்கு ஸ்டன்ட் மாஸ்டர்.

கோலிவுட்டின் கவர்ச்சி நடிகை விசித்ரா மலையாளம், தெலுங்கு படங்களில் தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். பல டிவி தொடர்களிலும் நடித்துவருகிறார்.

தற்போது என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின்மலம்புழாவில் நடக்கிறது. படத்தின் இயக்குநர் அருண் பிரசாத். கதாநாயகி அஞ்சலா சவேரி.

நடிகை விசித்ராவும், ஸ்டன்ட் நடிகர்கள் 50 பேரும் சேர்ந்து வில்லன் ஆட்களைத் துரத்துவது போன்ற காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அப்போது ஸ்டன்ட்மாஸ்டர் ஷூட்டிங்கில் அதிக ஈடுபாடு காட்டாமல் விசித்ராவை சில்மிஷம் செய்து கொண்டேயிருந்தார்.

பலமுறை பொறுத்துப் பார்த்த நடிகை விசித்ரா அந்த ஸ்டன்ட் நடிகரின் காலரைப் பிடித்து கீழே தள்ளினார். இதையடுத்து கோபமடைந்த அந்த ஸ்டன்ட் மாஸ்டர்என்னையே தள்ளி விட்டாயா? என்று கூறி விசித்ராவின் கன்னத்தில் அறைந்தார்.

இதையடுத்து, பட யூனிட்டில் உள்ள பலர் விசித்ராவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அடி வாங்கிய துக்கத்தில் தூக்கம் வராமல் ஹோட்டல்அறையில் அழுது தவித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, இரவு 12 மணிக்கு விசித்ரா தங்கியிருந்த அறைக் கதவு தட்டப்பட்டது. விசித்ரா எழுந்து சென்று கதவைத் திறந்த போது, ஸ்டன்ட் மாஸ்டர்போதையுடன் நின்று கொண்டிருந்தார். உள்ளே புகுந்த அவர் விசித்ராவைக் கற்பழிக்க முயன்றார்.

பயந்து போன நடிகை விசித்ரா, அவரைத் தள்ளி விட்டு விட்டு வந்த தெலுங்கு பட டைரக்டர், அருண் பிரசாத், ஹீரோ பாலகிருஷ்ணா ஆகியோரிடம் புகார்கொடுத்தார்.

அவர்கள் ஸ்டன்ட் மாஸ்டரிடம் எதுவுமே கேட்கவில்லை. இதையடுத்து, தெலுங்கு திரையுலகில் தனக்கு நியாயம் கிடைக்காது என்று கருதிய விசித்ராஉடனடியாக ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு சென்னைக்கு வந்தார்.

சென்னையில் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்திடம் அழுது கொண்டே புகார் கொடுத்துள்ளார்.

சக நடிகையைக் கற்பழிக்க முயற்சி நடந்தது குறித்து தமிழ்த் திரையுலகமே கொதித்துப் போயிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil