செம கிளாமர் போஸ்.. அதைவிட கிளாமர் கேப்ஷன்.. நடிகையை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகையின் போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
ஆபா பால் பிரபல பாலிவுட் நடிகை ஆவார். அதோடு சிறந்த மாடலாகவும் இருந்து வருகிறார்.
படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் பல தைரியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். 30 வயதான ஆபா பால், தனது 15 வயதிலேயே மிஸ் டெல்லி அழகிப் போட்டியில் பங்கேற்றார்.

பிரபல மாடல்
பல முன்னணி ஃபேஷன் டிஸைனர்களான மனீஷ் மல்ஹோத்ரா, அனுராக் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பலரிடம் மாடலாக பணி புரிந்துள்ளார். கோட்டக் மஹேந்திரா, ரொமான்ஸ் பர்ஃபியூம், பிபி ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட பிராண்டுகளுக்கு மாடலாக பணியாற்றியிருக்கிறார்.

காமசூத்ரா 3டி
2008ஆம் ஆண்டு வெளியான மிக்கா சிங் படத்தில் இடம் பெற்ற துனாலி பாடலில் ஆடியிருக்கிறார் ஆபா பால். 2013ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளியான காமசூத்ரா 3டி படத்தில் நடித்து பெரும் பிரபலமானார். அந்தப் படத்தில் அவரது துணிச்சலான நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது.

வெப் சீரிஸில்
இந்தப் படம் 2013ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் காட்சியிடப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியான டேஸ்ட் படத்திலும் நடித்துள்ளார் ஆபா பால். கண்டி பாட் என்ற வெப் சீரிஸில் மாமி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமான ஆபா பால்.

கவர்ச்சி போட்டோக்கள்
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஆபா பாலை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அது என்ன மூடு?
அந்த வகையில் சிங்க்கின் மீது சாய்ந்தப்படி படு செக்ஸியாக போஸ் கொடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் ஆபா பால். அந்த போட்டோவுக்கு லாக்டவுன் மூட் என கேப்ஷன் கொடுத்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அது என்ன மூடு என கேட்டு கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











