கணவருடன் மாலத்தீவில் ரொமான்ஸ் பண்ணும் பிரபல நடிகை... தெறிக்கவிடும் போட்டோஸ்!

மும்பை: பிரபல நடிகையான ஆக்கன்ஷா சிங் மாலத்தீவில் தனது கணவருடன் ரிலாக்ஸ் செய்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வருண் தவான் மற்றும் ஆலியா நடித்த பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தில் ஆலியா பட்டின் தோழியாக மறக்கமுடியாத தோற்றத்தில் நடித்தவர் ஆகாங்ஷா சிங்.

ஆனால் அதன்பிறகு அவருக்கு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. பின்னர் பைல்வான் என்ற படத்தின் மூலம் கன்னடத் திரைப்படத்தில் அறிமுகமானார் ஆக்கன்ஷா சிங்.

மாலத்தீவில் ஓய்வு

மாலத்தீவில் ஓய்வு

அதைத் தொடர்ந்து தமிழில் கிளாப் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இந்தியில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் நடிகை ஆக்கன்ஷா சிங். தொடர்ந்து பிஸியாக உள்ள ஆக்கன்ஷா சிங், அதிலிருந்து ஓய்வு எடுக்க, ஒரு மினி விடுமுறைக்காக கடந்த 14ஆம் தேதி அன்று மாலத்தீவுக்கு பறந்தார்.

மாலத்தீவில் ஜாலி

மாலத்தீவில் ஜாலி

அவருடன் அவரது கணவர் குணால் சைனும் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் மாலத்தீவில் ஜாலியாக ஓய்வை கழிக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது மாலத் தீவு ஜாலி ட்ரிப் குறித்தும் நடிகை ஆகன்ஷா சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மாலத்தீவு போட்டோஸ்

மாலத்தீவு போட்டோஸ்

அவரது ட்ராவலிங் டைரி அவரது ஸ்டைல் ​​டைரியாகவும் உள்ளது. விதவிதமாக அத்தனை போட்டோக்களை ஷேர் செய்து திணறடிக்க வைத்து வருகிறார். ரிசார்ட்டில் அவர் அணிந்திருந்த வெள்ளை உடை மற்றும் கடற்கரையில் அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற உடை ஆகியவற்றில் அசத்தலாக உள்ளார் ஆகன்ஷா.

கணவருடன் நீச்சல் குளத்தில்

கணவருடன் நீச்சல் குளத்தில்

மேலும் கணவருடன் நீச்சல் குளத்தில் காலை உணவை சாப்பிட்டது மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஸ்பா சிகிச்சையை மேற்கொண்டது உள்ளிட்ட போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஆக்கன்ஷா சிங். குணால் மற்றும் ஆகன்க்ஷா இருவருக்கும் இடையே உள்ள காதலை வெளிப்படுத்தும் சில க்யூட் போட்டோக்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

அட்லி படத்திலும்..

அட்லி படத்திலும்..

தற்போது ஊர் திரும்பியுள்ள ஆக்கன்ஷா பல படங்களில் மீண்டும் பிஸியாகிவிட்டார். மே டே படத்தில் அஜய் தேவ்கனின் மனைவியாக நடிக்கிறார் ஆக்கன் ஷா. இந்த படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் மீட் க்யூட் என்ற தெலுங்கு ஆந்தாலஜி படத்திலும் நடித்து வருகிறார் ஆக்கன்ஷா. ஆக்கன்ஷா சிங் அட்லி ஷாருக்கானை இயக்கும் படத்திலும் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X