அப்பாவின் மரணத்தால் இத்தனை நாள் நடிக்காமல் ஒதுங்கியிருந்தேன்.. நடிகை உருக்கம்!

சென்னை: தனது அப்பாவின் மரணத்தால் இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்ததாக நடிகை ஆன்யா சிங் கூறியுள்ளார்.

இந்தியில் வெளியான கைய்தி பேன்ட் படத்தில் நடித்தவர் ஆன்யா சிங். இந்தப் படம் 2017ஆம் ஆண்டு வெளியானது.

Actress Aanya singh says why she was not in cinema for lase two years

இதைத்தொடர்ந்து படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த ஆன்யா சிங், கார்த்திக் ராஜு தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கும் கண்ணாடி படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கண்ணாடி படத்தின் மூலம் ஆன்யா சிங் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தது ஏன் என விளக்கமளித்துள்ளார்.

அதாவது 2017ல் தனது முதல் இந்தி படம் வெளியான போது தனது தந்தை புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள பல மாதங்களானதால் தன்னால் படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

தான் நடித்த கைதி பேண்ட் படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் ராஜு, சந்தீப் கிஷன் ஜோடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கிய கண்ணாடி படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்ததாக கூறியுள்ள ஆன்யா சிங் தற்போது தமிழில் பேச கற்றுக்கொள்கிறேன் என்றார்.

More from Filmibeat

Read more about: heroin நடிகை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X