'விஜய் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் இப்ப எங்கனே தெரியல' - விஜய் ரசிகர்களுடன் ஆர்த்தி மோதல்

By Vignesh Selvaraj

Recommended Video

'விஜய் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் இப்ப எங்கனே தெரியல' - ஆர்த்தி -வீடியோ

சென்னை : நடிகை ஆர்த்தி, விஜய் படங்களைப் பற்றி ட்வீட் செய்ததால் விஜய் ரசிகர்களுக்கும், ஆர்த்திக்கும் ட்விட்டரில் மறுபடியும் மோதல் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இடத்தில் இருப்பவர் விஜய். சமீபத்தில் வெளிவந்த 'மெர்சல்' படம் தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தியுடன் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதி வருகின்றனர். ஆர்த்தியின் ட்வீட்டில் அஜித்தை கலாய்த்தும் ரிப்ளை செய்து வருகின்றனர்.

அஜித் ரசிகை

அஜித் ரசிகை

நடிகை ஆர்த்தி, அஜித்தின் தீவிர ரசிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்பதால் இந்த மோதலில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்றாலும், அவர் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக இதுவரை பல்வேறு ட்விட்களில் விஜய்யை விமர்சித்துள்ளார்.

அஜித் அண்ணா

அஜித் அண்ணா

அஜித் பெயரை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உதாரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருந்தார் நடிகை ஆர்த்தி. அதற்கு ஒரு விஜய் ரசிகர், 'ரசிகர் மன்றத்தை கலைச்சிட்டாரு சரி, அப்படியே பணம் வாங்காம நடிக்கச் சொல்லுங்க... உங்களை வெச்சு அவர் மட்டும் பணம் வாங்கலாமா? எனக் கேட்டுள்ளார்.

எங்கனே தெரியலை

'அஜித்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டமில்லை ஆனால் உங்களை வைத்து எடுத்த பல தயாரிப்பாளர்கள் எங்கனே தெரியல...' என ஆர்த்தி விஜய்யை நேரடியாகவே விமர்சித்துள்ளார்.

பேரரசு காணோம்

ஆமா தளபதி வெச்சு மெகாஹிட் குடுத்து வசூல் வேட்டை பண்ண பேரரசுலாம் அஜித்த வெச்சு படம் கொடுத்து காணாம போயிட்டார் ஹ்ம்ம்!

பூராமே வொர்ஸ்ட்

அக்கா... ஆஞ்சநேயா, ஏகன், ஆழ்வார் படங்களை நீ பாத்துருக்கியா ஃபர்ஸ்ட் அத சொல்லு... எங்களோடது வொர்ஸ்ட் படம் நாலைஞ்சு இருக்கும். உங்களுக்கு பூராமே வொர்ஸ்ட் ஆச்சே..!

இருந்ததாகவும்

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தினு ஒருத்ர் இருந்ததாகவும் அவர் அஜித்கூட படம் பண்ணதாகவும் அதோட அவர் ஊரவிட்டே தொழிலைவிட்டே போயிட்டதாகவும் சொல்லுவாங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X