அச்சு அசலாக நயன்தாராவாக மாறிய நடிகை..கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பார்...முழுசா சந்திரமுகியாக மாறிய மனைவி கங்காவை பார் என்று சந்திரமுகி படத்தில் வரும் வசனத்தை போல, காமெடி நடிகை ஒருவர் நயன்தாரா போல அச்சு அசலாக மேக்கப் போட்டு அசத்தி உள்ளார்.
அந்த புகைப்படத்தில் நயன்தாரா தனது திருமணத்திற்கு அணிந்து வந்த சேலை போல அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் அந்த நடிகையை கிண்டலடித்து வருகின்றனர்.

தடபுடலான திருமணம்
பல ஆண்டுகள் நீடித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் ஒருவழியாக திருமணத்தில் முடிந்தது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் திருமணத்தில் ரஜினி,ஷாருக்கான், அட்லி, ஏஆர்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

எம்ப்ராய்டரி புடவை
நயன்தாரா திருமணத்தை விட திருமணத்தின் போது நயன்தாரா அணிந்து வந்த அந்த சிவப்பு நிற புடவை மிகவும் டிராண்டானது. முற்றிலும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட முழுக்க முழுக்க கைவினைக் கலையால் உருவாக்கப்பட்ட புடவை, முழுக் கை பிளவுஸ் என அமர்க்களமாயிருந்தார் நயன்தாரா. இதன் எம்பிராய்டரி டிசைன்கள் ஹோய்சாளா கோயில்களின் சிற்பங்களிலிருந்து இன்ஸ்பையர் ஆகி உருவாக்கப்பட்டவை என அதன் வடிவமைப்பாளர் மோனிக்கா ஷா கூறியுள்ளார்.

மரகத கற்கள் நகை
மேலும், நயன்தாரா அணிந்திருந்த நகை மரகத கற்கள் பதித்த நெற்றிச்சுட்டி, காதணி, மோதிரம், வளையல்கள் அவரை கிளாசியான லுக்கை தந்தது. நெக்லசுடன் ஏழடுக்கு சட்லடா அணிந்திருந்தார். அது அவருக்கு ராணி போன்ற ஒரு கம்பீரமான தோற்றத்தை கொடுத்தது. இயற்கை ஒளியும் நயனை வைரம் போல் ஜொலிக்க வைத்தது.
Recommended Video

நயன்தாரா போல
நயன்தாரா திருமணத்தை அடுத்து பல ஜவுளிக்கடைகளில், நயன்தாரா புடவை என்ற பெயரில் வியாபாரம் படு ஜோராக நடந்தது.இந்நிலையில், நகைச்சுவை நடிகையான ஆர்த்தி கணேஷ், நயன்தாராவின் திருமண கோலத்தை இமிட்டேட் செய்து, சிவப்பு நிற எம்பிராய்டரி சேலை, ஜாக்கெட், நகைகள் என அச்சு அசலாக நயன்தாரா போல மாறியிருந்தார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நடிகை ஆர்த்தியைஇதெல்லாம் தேவையா என கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications