Vadivelu - ‘இவ நல்லா நடிக்கிறா.. இவளை படத்துலேர்ந்து தூக்கிடுங்க’.. வடிவேலுவின் கோர முகத்தை சொன்ன நடிகை

சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2, மாரீசன் என்று பிஸியாக நடித்துவருகிறார் வடிவேலு. இந்நிலையில் அவர் குறித்து ஆர்த்தி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

Actress Aarthi Talks about Vadivelu in Latest Interview

தனி பாணி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.

வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வனவாசம் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக வெளியான மாமன்னன் மாபெரும் வெற்றி பெற்றது.அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடிக்கிறார். அதனை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படமும் வடிவேலுவின் பெயர் சொல்லும் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

ஆர்த்தி பேட்டி: வடிவேலு எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.முக்கியமாக தன்னுடன் நடித்தவர்களையும், நடிப்பவர்களை காலி செய்வதில் முதல் ஆளாக இருப்பார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் பிரபல காமெடி நடிகை ஆர்த்தி சமீபத்தில் ஒரு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் வடிவேலு பற்றி பேசிய அவர், "வடிவேலுவுடன் ஒரு படத்தின் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தேன்.

நல்லா நடிக்கிறம்மா: அப்போது எனது நடிப்பை பார்த்த வடிவேலை என்னை அழைத்து, 'நீ என்னைவிட நல்லா நடிக்கிறம்மா.. சூப்பரா நடிக்கிற' என்று பாராட்டினார். என்னிடம் பாராட்டை தெரிவித்துவிட்டு படத்தின் இயக்குநரை கூப்பிட்டு, 'என்னைவிட நல்லா நடிக்கும் இந்த பொண்ணு நம்ம படத்துக்கு வேண்டாம். இவரை மாற்றிவிட்டு வேறு நடிகையை கமிட் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். அதனால் அந்தப் படத்தின் வாய்ப்பு எனக்கு போய்விட்டது.

கணவருக்கும் அதேதான்: எனக்கு மட்டுமின்றி எனது கணவருக்கும் இப்படி நடந்திருக்கிறது. இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் எனது கணவர் கணேஷ் நடிக்கவிருந்தார். ஆனால் அந்தப் படத்துக்கு கணேஷ் வேண்டாம் என்று கூறிவிட்டார். அதனால் அவர் நீக்கப்பட்டுவிட்டார். பொதுவாக நடிகர்களோ, நடிகைகளோ நன்றாக நடித்தால் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்று வளர்ந்த நடிகர்கள் நினைப்பார்கள்.

வடிவேலு ஒரு பாம்பு: ஆனால் வடிவேலு மட்டும் தன்னைவிட வேறு யாராவது நன்றாக நடித்துவிட்டால் அவர்கள் தன்னுடன் நடிக்கக்கூடாது என்ற கொள்கையில் இருப்பார். பாம்பு என்றால் கொத்தும். அதுதான் அதன் குணம். அதுபோல் வடிவேலுவின் குணத்தை யாராலும் மாற்றவே முடியாது" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X