பெண்களை வைத்து விபச்சாரம்.. போலீசில் வசமாக சிக்கிய மாதவன் பட நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்!

மும்பை : பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த மாதவன் பட நடிகையை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நடிகையான ஆர்த்தி மிட்டல், காஸ்டிங் இயக்குநராக இருக்கிறார். பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள இவர், மாதவனுடன் ஒரு படத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

actress Aarti Mittal has been arrested for allegedly running a prostitution racket

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து தன்னையும் ஒரு செலப்பிரிட்டியாக காட்டி வந்துள்ளார்.

கையும் களவுமாக கைது : பாலிவுட் நடிகையான ஆர்த்தி மிட்டல் மாடல் அழகிகளிடம் பட வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை தீவிரமாக கண்காணித்த போலீசார் ஆர்த்தி மிட்டலை கையும் களவுமாக கைது செய்தனர். அந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

actress Aarti Mittal has been arrested for allegedly running a prostitution racket

நடிகை ஆர்த்தி மிரட்டல் : இதுகுறித்து போலீசார் மீடியாவிற்கு அளித்துள்ள பேட்டியில், ஆர்த்தி மிரட்டல் சினிமாவில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பல பெண்களை மயக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். இதற்காக ஓஷிவாராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சில இடங்களில் விபச்சாரம் செய்துள்ளார். இதுகுறித்து புகார் வந்ததும் அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு, வாடிக்கையாளர் போல நடித்து, ஆர்த்தியை தொடர்பு கொண்டு எங்களுக்கு இரண்டு பெண் வேண்டும் என்று கேட்டோம்.

காத்திருந்து கைது : இதையடுத்து, ஆர்த்தி இரண்டு பெண்களின் புகைப்படத்தை அனுப்பிவைத்தார். ஓகே என்றால், 60 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என்றும் பணத்தை கோரேகானில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பெற்றுக்கொள்வதாக கூறியதை அடுத்து, அந்த ஓட்டலில் போலீஸ் அதிகாரிகள் காத்திருந்து ஆர்த்தி மிட்டலை கைது செய்தனர்.

actress Aarti Mittal has been arrested for allegedly running a prostitution racket

மறுவாழ்வு மையத்தில் : ஆர்த்தி இரண்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதை போலீசார் ஆதாரங்களுடன் நிரூபித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பெண்கள், மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு15 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாகக் கூறி விபச்சாரத்தில் தள்ளி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X