‘கண்ணை நம்பாதே’ என் வாழ்க்கையில் முக்கியமான படம்.. நடிகை ஆத்மிகா மனம் திறந்த பேட்டி!

சென்னை : கண்னை நம்பாதே திரைப்படம் என் வாழ்க்கையில் முக்கியமான படம் என்று நடிகை ஆத்மிகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அருள்நிதி நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் திரைப்படத்தை இயக்கிய மு மாறன் இயக்கி திரைப்படம் கண்ணை நம்பாதே.

இதில் படத்தில் ஆத்மிகா, பூமிகா சாவ்லா, பிரசன்னா, சதீஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், பணிச்சுமை காரணமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி படம் அறிவித்தால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

கண்ணை நம்பாதே

கண்ணை நம்பாதே

நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. முதல் நாள் முதல் காட்சியைப்பார்த்த ரசிகர்கள் படம் திரில்லிங்கா இருப்பதாக கூறி படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளனர். படத்திற்கு நல்ல விமர்சனம் வந்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

திறமையை நிரூபிக்கவாய்ப்பு

திறமையை நிரூபிக்கவாய்ப்பு

கண்ணை நம்பாதே திரைப்படத்தில் ஆத்மிகாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதனால், மகிழ்ச்சியில் இருக்கும் ஆத்மிகா ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு நடிகைக்கும் தனது திறமையை நிரூபிக்கும் படி கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அப்படி என் கனவை நிறைவேற்றிய படம் தான் கண்ணை நம்பாதே.

முக்கியமான படம்

முக்கியமான படம்

இந்த படத்தில் என் நடிப்பை அனைவரும் பாராட்டுவதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் என்னுடைய திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும். இயக்குநர் இந்த கதையை என்னிடம் கூறிய போதே இந்த கதை எனக்கு பிடித்துவிட்டது. க்ரைம் திரில்லர் திரைப்படமான கண்ணை நம்பாதே நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். உதயநிதியுடன் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது, இந்தப் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும், இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குநருக்கு நன்றி என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X