மனிதகுலத்தை காப்பாற்ற… கடலை காப்பாற்றுங்கள்… ஆத்மிகா அட்வைஸ்!
சென்னை : விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியிருக்கும் கோடியில்ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஆத்மிகா.
நரகாசுரன், காட்டேரி போன்ற படங்கள் வெளியாகாமல் உள்ளன. மேலும் இவர் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
மீசைய முறுக்கு திரைப்படத்திற்கு பிறகு ஆத்மிகாவுக்கு எந்த ஒரு திரைப்படங்களும் வெளியாகாத நிலையில் இணையத்தில் அவ்வப்போது புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

வெளியாகவில்லை
துருவங்கள் பதினாறு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஆத்மிகா நடித்துள்ளார். முதல் படத்தைப் போலவே நரகாசுரன் திரைப்படத்தையும் சூப்பரான த்ரில்லர் திரைப்படமாக கார்த்திக் இயக்கியிருக்க கௌதம் மேனன் இதை தயாரித்திருந்தார். இப்படம் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக இன்று வரை வெளியாகாமல் உள்ளது.

த்ரில்லர் மூவி
ஆனந்த்கிருஷ்ணன்இயக்கத்தில்பாடகரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி உள்ள கோடியில் ஒருவன் படத்தின் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஆக்ஷன்மற்றும் திரில்லர் திரைப்படமாகும். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

கொண்டாடும் ஒரு நாள்
படவாய்ப்புகள்இல்லாததால்கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க தயார் எனகிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது இவர், உலக கடல் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் நடந்த படி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நம்முடைய நீல கிரகத்தை நாம் கொண்டாடும் ஒரு நாள் மற்றும் நமது அன்றாட வாழ்க்கையில் பெருங்கடல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆக்ஸிஜனை தருகிறது
கடல் நமது கிரகத்தின் நுரையீரலாக இருக்கிறது. நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை அதிகம் தருகிறது. கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழலை மோசமடையச் செய்யும் பிளாஸ்டிக் மாசுபாடுகளை தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம். மனிதகுலத்தை காப்பாற்ற, கடல்களைக் காப்பாற்ற உலகைக் காப்பாற்றுங்கள் என ஒரு அழகான பதிவை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











