ஆர்யாவை கணவராகவே நினைத்துவிட்டாரா அபர்ணதி? பெயருக்கு பின்னால் இருப்பதை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை அபர்ணதி தனது பெயருக்கு பின்னால் ஆர்யாவின் பெயரை சேர்த்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. சினிமாவுக்காக எப்பேர்ப்பட்ட ரிஸ்க்கையும் எடுக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ஆர்யா கடந்த ஆண்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவில் பிஸி

சினிமாவில் பிஸி

சாயிஷாவும் ஆர்யாவும் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றனர்.

மாடியில் அரட்டை

மாடியில் அரட்டை

லாக்டவுன் நேரத்தில் விதவிதமாக சமைத்து போட்டு ஆர்யாவை குதூகலப்படுத்தினார் நடிகை சாயிஷா. அந்த வீடியோக்களையும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் கணவன் மனைவி இருவரும் மொட்டை மாடியில் அரட்டை அடித்த வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.

எங்க வீட்டு மாப்பிள்ளை

எங்க வீட்டு மாப்பிள்ளை

அந்த வீடியோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் பெயர் செய்தி ஒன்றில் அடிபட்டு வருகிறது. அதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை.

பல சர்ச்சைகள்

பல சர்ச்சைகள்

அப்போது திருமணம் ஆகாமல் இருந்த நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக இருந்தது இந்த நிகழ்ச்சி. இதில் பல பெண்கள் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார்கள். பல சர்ச்சைகளை சந்தித்த போதும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பெரும் ஹிட்டானது.

அபர்ணதி

அபர்ணதி

இதில் ஹோம்லி கேர்ளாக வந்து சக போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தவர் அபர்ணதி. நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு ஜீவி பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்துள்ளார் அபர்ணதி. படத்தில் நடிக்க தொடங்கியிருப்பதால் கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

ஆர்யாவின் பெயர்

ஆர்யாவின் பெயர்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நடிகர் ஆர்யா மீது தீவிர காதல் கொண்டார் அபர்ணதி. இந்நிலையில் தனது டிவிட்டர் கணக்கில் தனது பெயருக்கு பின்னால் 6ya என நடிகர் ஆர்யாவின் பெயரை சேர்த்துள்ளார். இதேபோல் தனது புரஃபைல் போட்டோவில் ஆர்யாவுடன் சேர்ந்திருக்கும் போட்டோவை வைத்துள்ளார் அபர்ணதி.

பர்யா

பர்யா

மேலும் பேக் கிரவுண்ட் இமேஜில் தன்னுடைய போட்டோவை வைத்துள்ள அபர்ணதி, தன் பெயரில் உள்ள பர் என்பதையும் ஆர்யா பெயரில் உள்ள யாவையும் சேர்த்து பர்யா என்றும் வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி போயுள்ளனர்.

கணவராக நினைத்து கொண்டிருக்கிறீர்களா?

கணவராக நினைத்து கொண்டிருக்கிறீர்களா?

இதேபோல் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிலும் தனது பெயருக்கு பின்னால் 6ya என சேர்த்துள்ளார் நடிகை அபர்ணதி. இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணம் முடிந்து குழந்தையே பிறந்துவிடும் போல் இருக்கிறது, இன்னும் அவரையே கணவராக நினைத்து கொண்டிருக்கிறீர்களா என கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X