லைட்டிங்கால் அசிங்கப்பட்ட அபர்ணதி.. போட்டோ போடுறதுக்கு முன்னாடி இதையெல்லாம் செக் பண்ணுங்கப்பா!
Recommended Video

சென்னை: அபர்ணதி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்ணதி. தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.
கலகலப்பாக பேசக்கூடியவரான அபர்ணதிக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே, ரசிகர்கள் அதிகம். தற்போது சினிமாவிலும் நடித்து வருவதால், ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்ஸ்டாகிராம்:
இதனால் அவர் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பாராட்டியும், வாழ்த்தியும் பதில் இடுவது வழக்கம். இதுவரை கவர்ச்சியான புகைப்படங்கள் எதையும் அபர்ணதி வெளியிட்டதில்லை என்பதால், அவரை திட்டியோ, ஆபாசமாக பேசியோ இதுவரை யாரும் கமெண்ட் வெளியிட்டதில்லை.

உடையால் சர்ச்சை:
இந்நிலையில், புதிதாக அவர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்களால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அபர்ணதி. சம்பந்தப்பட்ட புகைப்படங்களில் அவர் கருப்பு நிற டீசர்ட்டும், சிவப்பில் ஓவர் கோர்ட்டும் அணிந்திருக்கிறார். சந்தன நிறத்தில் பேண்ட் போட்டிருக்கிறார்.

லைட்டிங் பிரச்சினை:
ஆனால், மாடியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் லைட்டிங் பிரச்சினையால் அவர் அணிந்திருக்கும் பேண்ட் நிறம் தோல் நிறத்திற்கு தெரிகிறது. இதனால் அவர் பேண்ட் போடவில்லை என நினைத்து கண்டபடி நெட்டிசன்கள் திட்டத் தொடங்கினர்.

ரசிகர்கள் அறிவுரை:
ஆனால், மற்றொரு புகைப்படத்தில் நெட்டிசன்கள் தவறாக புரிந்து கொண்டனர் என்பது உறுதியானது. லைட்டிங்கால் தான் அவரது பேண்ட் நிறம் அப்படி தெரிந்தது எனப் புரிந்து கொண்ட சிலர் மன்னிப்பு கேட்டுள்ளனர். கூடவே சமூகவலைதளங்களில் புகைப்படம் போடுவதற்கு முன் இதையெல்லாம் சரி பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அமலாபால்:
ஏற்கனவே இதேபோன்ற உடை சர்ச்சையில் பல நடிகைகள் சிக்கியுள்ளனர். அடிக்கடி இத்தகைய சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகை அமலாபால் தான். தற்போது அந்த வரிசையில் நடிகை அபர்ணதியும் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











