திருமணத்திற்குப் பின்னும் நடிப்பார்... காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அபினிதாவின் தாயார் தகவல்

சென்னை: காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அபினிதா, திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்ப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

கற்பவை கற்றபின் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் அபினிதா. இது தவிர 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் பழனியப்பா நகர் கோதாவரி தெருவில் வசித்து வரும் அபினிதா, கடத்தப்பட்டு விட்டதாக நேற்று தகவல் பரவியது. வாட்ஸ் அப்பிலும் அபினிதா புகைப்படத்துடன் கடத்தப்பட்டு விட்டதாக செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அபினிதா கடத்தப்படவில்லை, விருப்பப்பட்டு காதலனுடன் சென்றுள்ளார் என வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து பரபரப்பு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், தனது மகளின் காதல் திருமணம் குறித்து அபினிதாவின் தாயார் கற்பகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

நடிகை அபினிதா...

நடிகை அபினிதா...

அபினிதா நடித்துள்ள கற்பவை கற்றபின், மாமன் மச்சான் போன்ற படங்கள் வெளிவந்துவிட்டன. மீனாட்சி காதலன் இளங்கோவன், 6 சக்கர குதிர, ஒரு தோழன், ஒரு தோழி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். விழா படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

காதல்...

காதல்...

கற்பவை கற்றபின் படத்தில் நடித்தபோதே அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மகேஸ் என்பவரை காதலிப்பதாக அபினிதா கூறினாள். ஒரு படத்தை இயக்கிய பின்னர் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறினோம்.

புகார்...

புகார்...

ஆனால் அபினிதா திடீரென காணாமல் போய் விட்டாள். இதுபற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தேன். அதில் அபினிதாவின் காதல் விவகாரம் பற்றியும் கூறியிருந்தேன். இருந்தாலும் காதலன் மகேசுடன்தான் அபினிதா சென்றிருக்கிறாளா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

வாபஸ்...

வாபஸ்...

போலீசார் விசாரித்து எனது மகள் மகேசுடன் இருப்பதை உறுதி செய்து விட்டனர். 2 பேருமே வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்து எழுதிக் கொடுத்து விட்டு சென்று விட்டனர். நானும் புகார் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டேன்.

புதிய படங்கள்...

புதிய படங்கள்...

திருமணத்துக்கு பின்னரும் அவள் நடிக்கப்போவதாக கூறியிருந்தாள். எனவே புதிய படங்களில் அபினிதா நடிப்பாள் என்று எதிர்பார்க்கிறேன்.

நானும் நடிகை தான்...

நானும் நடிகை தான்...

நானும் சினிமா உலகில் தான் இருக்கிறேன். ஒரு நடிகையின் வாக்கு மூலம், பதிலடி போன்ற படங்களில் பாடல் எழுதியுள்ளேன். களவாணி படத்தில் சிறிய வேடத்தில் வேடத்தில் நடித்துள்ளேன். ‘‘அண்டாவை காணோம்'' என்ற புதிய படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளேன்.

கால்ஷீட் பிரச்சினை...

கால்ஷீட் பிரச்சினை...

சினிமாவை பற்றி ஓரளவுக்கு தெரிந்து வைத்திருந்ததால், மகள் காதலிக்க தொடங்கியவுடன் கால்ஷீட் பிரச்சினை எதுவும் வராமல் நானே பார்த்துக் கொண்டேன். புதிய படங்களையும் தவிர்த்து விட்டோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X