நடிகர் அஜித்திடம் இருந்து 'அந்த ஒரு விஷயத்தை' கற்றுக்கொள்ள விரும்பும் பிக்பாஸ் அபிராமி!
Recommended Video
சென்னை: நடிகர் அஜித்திடம் இருந்து தான் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள விரும்புவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
மாடலான அபிராமி ஏராமான விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்திருந்தார் அபிராமி.
இந்தப்படத்தில் அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. படம் ரீலிஸின் போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் அபிராமி.

அபிராமி இன்டர்வியூ
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, தனது நண்பர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நடிகை அபிராமி பேட்டி கொடுத்துள்ளார்.

மகிழ்ச்சி
அதில் நோ மீன்ஸ் நோ என்பது வார்த்தை மட்டுமல்ல அது ஒரு உணர்வு. என்கேபி படத்தின் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.

வாழ்க்கை முழுக்க
அஜித்துடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம். அவருடன் சேர்ந்து நடித்ததை வாழ்க்கை முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்வேன் என்றும் அபிராமி கூறினார்.

கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்
மேலும் அஜித் மிகவும் சாதாரணமாக இருப்பார் என்று கூறிய அபிராமி, அவருக்கு ஆன்மிக நம்பிக்கை அதிகம் என்றும் தெரிவித்தார். மேலும் அஜித் ஒரு பாசிடிவ் மனிதர் என்றும் அந்த குணத்தை அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் என்றும் அபிராமி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











