Thug Life - 20 வருடங்களுக்கு பிறகு கமலுக்கு ஜோடி?.. தக் லைஃப் பற்றிய லேட்டஸ்ட் தகவல் உள்ளே

சென்னை: Thug Life (தக் லைஃப்) மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அரசியலில் கவனம் செலுத்திவந்த கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி தந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கமலின் நடிப்பை பார்த்த பலரும் ஆண்டவர் இன்னும் ஃபார்ம் ஆவுட் ஆகல என்று மகிழ்ச்சியடைந்தனர். படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. இதனால் கமல் ஹாசனும் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Abirami Will Act In Kamals Thug Life

அடுத்த படம்: விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு இந்தியன் 2 படத்தையும் மீண்டும் ஆரம்பிக்க இசைவு தெரிவித்தார் கமல். அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. மேலும் அந்தப் படத்தின் மூன்றாவது பாகமும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக திரைத்துறையில் பலமாகவே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இது இல்லாமல் ஹெச். வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் கமல்.

கமல் - மணிரத்னம்: சூழல் இப்படி இருக்க ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது என்னவென்றால் கமல் ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் இணைவதுதான். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட், மெட்ராஸ் டாக்கீஸ். ராஜ்கமல் நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். கமல் ஹாசனின் லைன் அப்பில் இந்தப் படத்துக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

தக் லைஃப்: ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரும் இணைந்து நாயகன் என்ற க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்தப் படமும் அந்த வரிசையில் இணையும் என கமலின் ரசிகர்கள் நம்புகின்றனர். படத்துக்கு தக் லைஃப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் இண்ட்ரோ வீடியோ சமீபத்தில்தான் கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது.

அபிராமி ஜோடி?: தக் லைஃப்பில் த்ரிஷாவும் நடிக்கிறார். இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் அபிராமியும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அபிராமி ஏற்கனவே கமல் ஹாசனுடன் விருமாண்டி படத்தில் ஜோடி சேர்ந்திருந்தார். அதில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருந்தது. எனவே இந்தப் படத்தில் அவரும் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X