"இவனை தூக்கில் போட்டால் என்ன?" - கொந்தளித்த சிம்பு பட நடிகை!

டெல்லி : சிம்புவின் 'சிலம்பாட்டம்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சனா கான். இவர் தற்போது ட்விட்டரில் கோபமாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் ஒரு 8 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பற்றி தான் இவர் பேசியுள்ளார்.

'இவனை தூக்கில் போட்டால் என்ன?' என வன்மையாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார் சனா கான்.

8 மாத குழந்தை

8 மாத குழந்தை

டெல்லியில் கூலி வேலை செய்யும் பெற்றோர் தங்களது 8 மாத குழந்தையுடன் வசித்து வருகின்றனர். தம்பதி வேலைக்கு செல்வதால், குழந்தையை உறவினர் வீட்டில்விட்டு செல்வது வழக்கம். கடந்த 28-ம் தேதியும், தங்களது குழந்தையை அண்ணியிடம் விட்டு வீட்டு வேலைக்கு சென்றார்.

குழந்தை மீது பாலியல் வன்முறை

குழந்தை மீது பாலியல் வன்முறை

ஞாயிற்றுக்கிழமை என்பதால் அண்ணியின் 28 வயது மகனும் வீட்டில் இருந்துள்ளான். குடிபோதையில் இருந்த அவர், வெகுநேரமாகியும் குழந்தையின் அருகில் யாரும் இல்லாததால், குழந்தையை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளான்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

மதியம் வீடு திரும்பிய குழந்தையின் தாய், குழந்தையின் ஆடையில் ரத்தம் இருந்ததை பார்த்ததும் உடனே கணவரிடம் கூறி மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், பலாத்கார வன்முறையால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வாலிபர் கைது

வாலிபர் கைது

உடனடியாக மருத்துவமனையில் குழந்தையை சேர்த்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் குழந்தை அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளது. புகாரின் பேரில், போலீசார் குழந்தையின் உறவினரான 28 வயது வாலிபரை கைது செய்துள்ளனர்.

ட்விட்டரில் சனா கான்

இதுதொடர்பாகத்தான் நடிகை சனா கான் வருத்தமாக ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். "இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு சுத்தமாக இப்போது இல்லை. பாதுகாப்பு மற்றும் நீதித்துறை மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் தூக்கில் போடக்கூடாது

ஏன் தூக்கில் போடக்கூடாது

"நீதித்துறை கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், குற்றம் செய்தவன் சில நாளில் சுதந்திரமாக வெளியில் வந்துவிடுவான். இவனை ஏன் தூக்கில் போடக் கூடாது?" என் சனா கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X