»   »  சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை கலாய்த்த பிரபல நடிகை... வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை கலாய்த்த பிரபல நடிகை... வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூப்பர்ஸ்டாரோடு சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்!

கோலாலம்பூர் : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்றும், நாளையும் நடக்கிறது.

நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து அணிகள் அறிமுகவிழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவருக்கு அருகில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அமர்ந்திருந்தார்.

நடிகை கஸ்தூரி, சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணனை கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி

நட்சத்திர கிரிக்கெட் போட்டி

நேற்று கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கிரிக்கெட் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சியும், ஜெயம் ரவி - ஆர்யாவின் கால்பந்து அணியினரின் அறிமுக நிகழ்ச்சியும் நடந்தது.

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்

தொடர்ந்து மலேசிய உள்ளூர் கலைஞர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் பேஷன் ஷோ நடைபெற்றது. விழாவின் நிறைவாக நடிகர் ரஜினிகாந்தும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனும் விளையாட்டு போட்டிகளுக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர்.

சரவணன்

சரவணன்

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன். கடை விளம்பரத்தில் ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளோடு நடித்து இவர் அதிகம் பிரபலமாகிவிட்டார்.

சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை விமர்சித்த கஸ்தூரி

இந்நிலையில், நட்சத்திர விழாவில் ரஜினிக்கு அவர் அருகில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானதைப் பார்த்துவிட்டு "மேக் அப், லிப்ஸ்டிக், விக், கோட் சூட்... அம்மாடியோவ் ! பக்கத்துல, எளிமையா கேசுவலா சூப்பர்ஸ்டாட் ரஜினி" என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.

நீங்க மட்டும்

"நீங்க டை அடிச்சிட்டு விதவிதமா போட்டோ போட்டா தப்பில்ல... அண்ணாச்சி விக், மேக்கப் போட்டா கிண்டல் பண்றீங்க?" என நெட்டிசன் ஒருவர் கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நோ அட்ஜஸ்ட்மென்ட்

அதற்கு பதிலளித்த கஸ்தூரி, "ஒரு கொசுவைகூட அடிக்காத என் கிட்ட போயி... டை அடிக்கறேன்னு சொல்லிட்டயேப்பு... நம்மக்கிட்ட எல்லாம் அசல், நோ அட்ஜஸ்ட்மென்ட்." எனக் கூறியுள்ளார். ஆனாலும், ரசிகர்கள் பலர் கஸ்தூரியின் கருத்தை எதிர்த்து கமென்ட் செய்துள்ளனர்.

English summary
Star Arts festival is taking place in Malaysia on behalf of the South Indian Artiste Association. Rajinikanth participated in the opening ceremony of cricket and football teams. Saravana Stores Saravanan was sitting beside Rajinikanth. Actress Kasthuri tweeted about Saravana Stores Owner Saravanan's make-up and Wig.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X