ஷாப்பிங் மாலில் சில்மிஷ விவகாரம்.. கைதான இளைஞர்களின் மன்னிப்பை ஏற்ற பிரபல நடிகை!

By

கொச்சி: பிரபல நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் மன்னிப்பை அந்த நடிகை ஏற்றுக் கொண்டார்.

Recommended Video

Anna Ben -கு நேர்ந்த கொடுமை | Meetoo, Cheap behavior - FilmibeatTamil

பிரபல மலையாள நடிகை அவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பகுதியில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், தன்னிடம் இரண்டு இளைஞர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறியிருந்தார்.

சூப்பர் மார்க்கெட்

சூப்பர் மார்க்கெட்

அவர் கூறியிருந்ததாவது: அந்த சூப்பர் மார்கெட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் இரண்டு பேர், என்னை கடந்து சென்றனர். ஒருவர் என்னை கடந்து செல்லும்போது என் பின்பக்கத்தில் கைவைத்துச் சென்றார். அது அதிர்ச்சியை கொடுத்ததால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. நான் அவர்களை நோக்கி சென்றபோது என்னை முற்றிலுமாக தவிர்த்தனர்.

கோபத்தில் இருந்தேன்

கோபத்தில் இருந்தேன்

அப்போது கடுமையான கோபத்தில் இருந்தேன். அவர்களை எதுவும் சொல்ல முடியவில்லை. பின் நானும் என் சகோதரியும் அம்மா மற்றும் சகோதரர் இருந்த காய்கறிகள் பிரிவுக்கு சென்றோம். அவர்கள் எங்களை பின் தொடர்ந்து வந்து பேச முயன்றனர். நான் நடித்த படத்தின் பெயரை தெரிந்து கொள்ள விரும்பினர்.

சோர்வை தருகிறது

சோர்வை தருகிறது

தூரத்தில் என் அம்மா வருவதைப் பார்த்ததும் சென்று விட்டனர். எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சென்ற அவர்கள் இதை மீண்டும் செய்வார்கள் என்று நினைக்கும்போது, எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருப்பதால், பெண்ணாக இருப்பது சோர்வை தருகிறது. இவ்வாறு உருக்கமாக கூறியிருந்தார்.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

இதையடுத்து இந்த செய்தி, கொச்சி போலீஸ் கமிஷனருக்கு சென்றதை அடுத்து அவர் சம்மந்தப்பட்ட பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவிட்டு விசாரிக்கச் சொன்னார். . இதையடுத்து ஷாப்பிங் மாலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, சில்மிஷத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்தனர்.

முகக் கவசம்

முகக் கவசம்

அவர்கள் மலப்புரம் பகுதியை இர்ஷத், ஆதில் என்பது தெரிய வந்தது. அவர்களை பிடித்த போலீசார், விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்டனர். அதை அந்த நடிகை ஏற்றுக்கொண்டார். இதனால் வழக்குப் பதியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நன்றி தெரிவிப்பு

நன்றி தெரிவிப்பு

இதுபற்றி பதிவு வெளியிட்டுள்ள அவர், இந்த விஷயத்தில் உடனடியாகக் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்த போலீஸுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அதோடு, மீடியா மற்றும் அவர் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், தனது குடும்பத்தினரின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X