நடிகையை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வில்லன் நடிகர்

By Siva

பெங்களூர்: தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த நடிகர் மீது கன்னட நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.

கன்னட படங்களில் நடித்து வருபவர் தீபா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கன்னட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்மா என்கிற தர்மேந்திரா மீது பேகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Actress accuses actor Dharma of extortion

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தர்மா தன்னை மிரட்டி பணம் பறித்து வந்ததாக தீபா தெரிவித்துள்ளார். இது குறித்து தீபா கூறியிருப்பதாவது,

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி படப்பிடிப்புக்காக ராஜராஜேஸ்வரி நகருக்கு வருமாறு தர்மா எனக்கு போன் செய்தார். தனது டிரைவர் நவீனை அனுப்பி வைத்து தனது காரிலேயே என்னை அழைத்து வரச் செய்தார். நான் அவர் சொன்ன இடத்திற்கு சென்ற பிறகு படப்பிடிப்பு ரத்தாகிவிட்டதாக கூறினார்.

சாப்பிட்டுவிட்டு கிளம்புமாறு கூறி உணவும், கூல் ட்ரிங்ஸும் அளித்தார். அதை சாப்பிட்ட பிறகு எனக்கு மயக்கம் வந்துவிட்டது. நான் மயக்கத்தில் இருந்தபோது என்னை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு அந்த வீடியோவை என்னிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.

நான் கேட்கும் போது எல்லாம் பணம் தராவிட்டால் வீடியோவை உன் பெற்றோரிடம் காட்டுவதுடன் ஆன்லைனில் அப்லோடு செய்துவிடுவேன் என்று மிரட்டினார். பணம் கொடுக்காவிட்டால் உன் கணவர், குழந்தைகளை கொன்றுவிடுவேன் என்று கூட கூறினார்.

அன்றில் இருந்து கடந்த மே மாதம் வரை அவர் ரூ. 14 லட்சத்தை மிரட்டிப் பறித்துள்ளார் என்றார் தீபா.

நடிக்க வரும் முன்பு டான்ஸ் கோரியோகிராபராக இருந்துள்ளார் தர்மா. திரையுலக பிரபலங்கள் விளையாடும் சிசிஎல்லில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி சார்பில் விளையாடியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X