திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
மும்பை: தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக விமானி மீது டிவி நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இதில் சினிமா, சின்னத்திரை நடிகைகளும் அதிகமாகச் சிக்கி மாட்டிக் கொள்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை
இந்நிலையில், சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்து வரும் நடிகை ஒருவர், விமானி ஒருவர் மீது பரபரப்பு பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். இது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டில் நன்றாக தெரிந்த நடிகை அவர். அந்தேரி பகுதியில் வசிக்கும் அவர் பெயரை போலீசார் தெரிவிக்கவில்லை.

சின்னத்திரை நடிகை
மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் அவர், சில புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். அவருக்குத் திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமானார், ஏர் இந்தியா விமானி அக்ஷத் சேத்தி. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அக்ஷத்தும் வாக்குறுதிக் கொடுத்தார்.

நெருங்கிப் பழகினர்
இதையடுத்து இருவரும் நெருங்கிப் பழகினர். இதையடுத்து பாலியல் ரீதியாகவும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் அக்ஷத், திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததால், நடிகையை தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த நடிகை, மும்பை ஓஷிவாரா போலீசில் புகார் கொடுத்தார்.

மோசடி செய்தார்
அந்த புகாரில், தன்னைத் திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார். போலீசில் இதுபற்றி புகார் கொடுத்தால், கொன்றுவிடுவதாக அவர் மிரட்டியதாகவும் அந்த நடிகைத் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











