வாய்ப்பு கேட்டு சென்ற நடிகையிடம் இயக்குனர் செய்த காரியத்தை பாருங்க

By Siva

மும்பை: பாலிவுட் இயக்குனர் சவுமிக் சென் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாதுரி தீக்சித், ஜூஹி சாவ்லா ஆகியோரை வைத்து குலாப் கேங் படத்தை இயக்கியவர் சவுமிக் சென். அவர் பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

பெயரை தெரிவிக்க விரும்பாத அந்த நடிகை கூறியிருப்பதாவது,

இயக்குனர்

இயக்குனர்

நான் 21 வயதில் நடிக்கத் துவங்கினேன். அப்போது சவுமிக் சென் எனக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார். அவர் என் நடிப்பை பாராட்டி தனது அடுத்த படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டார். அவரை பற்றி கூகுள் செய்தபோது அவர் ஓராண்டுக்கு முன்பு குலாப் கேங் படத்தை இயக்கியதை பார்த்தேன். உடனே எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. என் செல்போன் எண்ணை கொடுத்தேன், அவரும் கால் செய்தார்.

அழகு

அழகு

போன் செய்து பேசிய அவர் என் குரல் இனிமையாக இருப்பதாக தெரிவித்து நான் பார்க்க செக்சியாக இருப்பேன் என்று நம்புவதாக கூறினார். தனது படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டும் என்பதால் நான் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்று கேட்டார். அவர் படத்தில் நடிக்க விரும்பியதால் அவர் கேட்ட கேவலமான கேள்விகளுக்கு பதில் அளித்தேன். நேரில் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியதும் காபி கடையில் பார்க்கலாம் என்றேன். அவர் என்னை தன் வீட்டிற்கு வரவழைத்தார். பாவாடை, சட்டை, துப்பட்டா அணிந்து சென்றேன். என்ன இப்படி முழுதாக கவர் பண்ணயிருக்கிறீர்கள் என்று கேட்டு ஹக் பண்ணினார். அவர் என் முகத்தை பார்த்த விதமே எனக்கு பிடிக்கவில்லை.

முத்தம்

முத்தம்

நீங்கள் எவ்வளவு செக்சி என்பதை பார்க்க வேண்டும். கொஞ்சம் நடந்து காட்டுங்கள் என்றார். ஆபாச படம் பார்ப்பீர்களா என்று கேட்டு என் அருகில் அமர்ந்து லேப்டாப்பை ஆன் செய்தார். நீங்கள் நன்றாக முத்தம் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்றார். அவரின் எண்ணத்தை புரிந்து கொண்டு சார் உங்களுடன் படுக்க வரவில்லை என்றேன். என்னை உதவி இயக்குனராக ஏற்றுக் கொள்ள முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவரோ, சரி ஆனால் தினமும் எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றார். நானோ, அது நடக்காது என்றேன். நடக்கும். நீ ஒரு நாள் என்னை முத்தமிட ஏங்குவாய் என்றார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

என் கையில் ஒரு பேப்பரை கொடுத்து அதில் எழுதப்பட்டிருந்த உணர்ச்சிகரமான விஷயத்தை வாசிக்குமாறு கூறினார். ஒரு அறைக்குள் சென்று சுய இன்பம் அனுபவித்துவிட்டு வந்து இதை வாசித்தால் அதற்கேற்றபடி நீங்கள் சத்தம் கொடுப்பீர்கள் என்றார். அவரின் பேச்சை கேட்டு அதிர்ந்து நான் கிளம்புகிறேன் என்றேன். அவர் என்னை டைட்டாக கட்டிப்பிடித்தார். அவரை ஓங்கி அறைய வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நான் அவர் வீட்டில் இருந்ததால் பயமாக இருந்தது. அதன் பிறகு நான் எந்த இயக்குனரையும் தனியாக சந்தித்தது இல்லை என்றார் அந்த நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X