பூனை முகமூடியுடன்… குதித்து குதித்து ஆட்டம் போட்ட அடா சர்மா… குவியும் லைக்குகள்!
மும்பை : நடிகை அடா சர்மா பூனை முகமூடியை அணிந்துக்கொண்டு வித்தியாசமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் குடும்பத்தை சேர்ந்த அடா சர்மா மும்பையில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.
நடிப்பு மீது தீராத காதல் இருந்ததால் படிப்பை முடித்தவுடனே நடிப்பு பயணத்தை தொடங்கிவிட்டார்.

படிப்புக்கு முழுக்கு
மதுரையை பூர்வீகமாக கொண்டவர் அட சர்மா, இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தான் ஒரு நடிகை ஆகவேண்டும் என முடிவு செய்தார். நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். அதன் பிறகு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு படங்களில் வாய்ப்பை தேட ஆரம்பித்தார்.

கை தேர்ந்தவர்
நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் சல்சா, ஜாஸ் மற்றும் பல்லட் போன்ற அனைத்து நடனத்தை முழுவதுமாக முறையாக கற்று வந்தார். இதில் குறிப்பாக பெல்லி டான்சில் இவர் மிகவும் கை தேர்ந்தவர். இவரது நடனத்தை ராசிக்காதவர்கள் இருக்க முடியாது .அந்த அளவிற்கு நடனத்தில் வெளுத்து வாங்குவர் அடா சர்மா

அறிமுகமானார்
பட வாய்ப்புகளைத் தேடி பல ஆடிஷன்களில் பங்கேற்று வந்தார் அடா சர்மா. ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது. 2009ம் ஆண்டு "1920" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிப்பிற்காக பல பாராட்டுகளையும் பெற்றார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடித்தது.
Recommended Video

அறிமுகமானார்
இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்க விரும்பிய இவருக்கு பூரி ஜெகநாத் இயக்கிய ஹார்ட் அட்டாக் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், தமிழிலும் சார்லி சாப்ளின் 2 என்ற படத்தின் தனது அறிமுகத்தை கொடுத்தார். மேலும், சிம்புவின் இது நம்ம ஆளு என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பூனை முகமூடியில்
இன்ஸ்டா பக்கத்தில் எப்போதுமே தனது படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். இந்நிலையில் இப்போது, குட்டி டவுசரில் பூனை முகமூடிப்போட்டுக்கொண்டு வித்தியாசமாக டான்ஸ் ஆடி உள்ளார். மேலும், இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக காலையில் வெறும்வயிற்றில் எத்தனை வாழைப்பழம் சாப்பிடுவீங்க என்று கேள்வியும் கேட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் லாக்டவுனில் சும்மா இருந்தா இதெல்லாம் பண்ணத் தோனுதுல என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











