துவைத்த துணியில் சிலம்பம் சுற்றும் நடிகை..வேகமாக பரவும் வீடியோ !

மும்பை : நடிகைகள் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இந்த சூழலில், துவைத்த துணியை வைத்து சிலம்பம் சுற்றி காண்பிக்கிறார் கவர்ச்சி நடிகை அடா சர்மா..

தமிழ் குடும்பத்தை சேர்ந்த அடா சர்மா வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். தனது பள்ளி படிப்பை முடித்த உடனேயே நடிப்பு வாழ்க்கையை தொடங்கிவிட்டார்.

எப்போதும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்த இவர் இப்போது , துணியில் சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் ஆதரவும், பாராட்டும் பெற்று வருகிறது.

படிப்புக்கு முழுக்கு

படிப்புக்கு முழுக்கு

தமிழ் குடும்பத்தில் பிறந்த இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர், பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தான் ஒரு நடிகை ஆகவேண்டும் என முடிவு செய்தார் அடா சர்மா. நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் இவர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்த முடிவு செய்தார். ஆனால் அதற்கு அவரின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. பின் பெற்றோரின் வார்த்தைக்கிணங்க 12ம் வகுப்பு வரை படித்தார். அத்தோடு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு படங்களில் வாய்ப்பை தேட ஆரம்பித்தார்.

பெல்லி டான்சில்

பெல்லி டான்சில்

நடனத்தில் அதிக ஆர்வம் இருக்கும் அடா சர்மாவிற்கு , சல்சா, ஜாஸ் மற்றும் பல்லட் போன்ற அனைத்து நடனத்தை முழுவதுமாக முறையாக கற்று வந்தார். இதில் குறிப்பாக "பெல்லி டான்சில்" இவர் மிகவும் கை தேர்ந்தவர். இவரது நடனத்தை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது .அந்த அளவிற்கு நடனத்தில் வெளுத்து வாங்குவர் அடா சர்மா

முதல் படமே வெற்றி

முதல் படமே வெற்றி

பட வாய்ப்புகளைத் தேடி பல ஆடிஷன்களில் பங்கேற்று வந்தார் அடா சர்மா. ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏனென்றால் அவர் பார்க்க மிகவும் இளமையாக சின்ன பொண்ணு போல் இருப்பதால் பட வாய்ப்புகள் வரவில்லை. பின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு போல 2009ம் ஆண்டு "1920" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிப்பிற்காக பல பாராட்டுகளையும் பெற்றார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடித்தது.

சார்லி சாப்ளின் 2

சார்லி சாப்ளின் 2

இப்படி ஹிந்தியில் நடித்து கொண்டிருக்கும் வேளையில் தான் அவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் கால் பதிக்க முடிவு செய்தார், இந்நிலையில் இவர் தெலுங்கில் முதலில் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கிய "ஹார்ட் அட்டாக்" என்ற படத்தில் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகம் செய்யப்பட்டார் . தமிழில் இவர் சார்லி சாப்ளின் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கும் தனது முகத்தை அறிமுகம் செய்தார். இருப்பினும் இவர் சிம்புவின் "இது நம்ம ஆளு" என்ற படத்தில் ஒரு பாடலில் சின்ன கேரக்டரில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது .

துவைத்த துணியில் சிலம்பம்

துவைத்த துணியில் சிலம்பம்

மேலும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதுமே தனது படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். இந்நிலையில் இப்போது இவர் சேலையை மடித்து கட்டி கொண்டு துவைத்து அலசி எடுத்த துணியில் அற்புதமாக சிலம்பம் சுற்றுகிறார்.இதை பார்த்த ரசிகர்கள் ஆனந்தத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். சிலர் இப்படி கூட சிலம்பம் சுற்றலாமா என இவரை பார்த்து வாயை பிளந்து வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் பல வேலைகளை கற்று வரும் நடிகைகளுக்கு மத்தியில் இவர் எப்போதும் போட்டோஷூட்ஸ், கவர்ச்சி என்று பல விஷயங்களில் ஈடுபட்டு வந்தார். திடீரென்று சேலையை மடித்து கட்டிக்கொண்டு இப்படி மாறுவார் என்று யாரும் யோசிக்காத நிலையில் இந்த வீடியோவை பதிவிட்டு அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில்ஆழ்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X