இந்தப் பக்கம் பூனை..அந்த பக்கம் காகம்..வைரலாகும் பிரபல நடிகையின் மொட்டை மாடி யோகா..என்னா வளைவு?

By

சென்னை: உடலை வில்லாக வளைத்து பிரபல நடிகை வெளியிட்டுள்ள மொட்டை மாடி யோகா வீடியோ, வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி ஆறாவது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பொது இடங்களில்

பொது இடங்களில்

ஒவ்வொரு வருடமும் யோகா தினத்தன்று பொதுமக்கள் பொது இடங்களில் கூடி யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் யோகா தினத்துக்காக இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், கொரோனா பாதித்துள்ளதால், பொது இடங்களில் பலர் கூடி யோகா செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவை வீழ்த்த

கொரோனாவை வீழ்த்த

இதையடுத்து வீட்டில் யோகா செய்து வருகின்றனர். யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலை பேசிய பிரதமர் மோடி, 'சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்கான நாளாக யோகா தினம் அமைந்துள்ளது. அனைவரும் குடும்பத்துடன் வீட்டிலிருந்தே யோகா செய்யுங்கள். யோகா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழி' என்று கூறியுள்ளார்.

நடிகை அடா சர்மா

நடிகை அடா சர்மா

இந்நிலையில் சில நடிகர், நடிகைகள் தாங்கள் செய்துள்ள யோகா வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பிரபல நடிகை அடா சர்மா, நேற்று இரவே, தான் யோகா செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடி உச்சியில் அமர்ந்தபடி, உடலை அப்படி வளைத்து யோகா செய்கிறார்.

சர்க்கஸ் பயிற்சி

அவர் யோகா செய்வதை அவர் வீட்டு பூனை ஒன்றும் ஒரு காகமும் பார்த்தபடி இருக்கிறது. கேப்ஷனாக, நீங்கள் யோகா செய்துவீட்டிர்களா? என்று கேட்டுள்ளார். கூடவே, நீங்கள் உங்கள் வீட்டிலேயே முயற்சி செய்யலாம். உங்களுக்கு சர்க்கஸ் பயிற்சி இல்லை என்றால், உலகத்தின் உச்சியில் இருந்து யோகா செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று ஜாலியாகத் தெரிவித்துள்ளார்.

தூண்டுவதற்கு

தூண்டுவதற்கு

இந்த வீடியோவை பலர் பாராட்டியுள்ளார். ஒரு ரசிகர், நாளைக்குத்தானே (இன்று) யோகா தினம். நீங்கள் ஏன் ஒரு நாள் முன்னதாக வீடியோவை வெளியிட்டிருக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அடா சர்மா, வீட்டில் யோகா செய்ய உங்களைத் தூண்டுவதற்காகத்தான்' என்று கூறியுள்ளார். உங்க யூடியூப் சேனலில் இந்த முழு வீடியோவையும் பகிருங்களேன் என்று சிலர் கூறியுள்ளனர்.

பேசறதுக்கு வந்துச்சா?

பேசறதுக்கு வந்துச்சா?

சில நடிகைகள் கிரீன் குடித்துவிட்டு, டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருக்கும்போது நீங்கள் சிறப்பாக யோகா செய்கிறீர்கள் என்று ஒருவர் அவரை பாராட்டியுள்ளனர். ஒருவர், அந்த காக்கா உங்ககிட்ட பேசறதுக்காக வந்துச்சா? என்று கேட்டுள்ளார். உங்க மேக்கப், டிரெஸ்சிங், உங்க போஸ்ட் எல்லாமே சிறப்பாக இருக்கிறது என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

மேன் டு மேன்

மேன் டு மேன்

நடிகை அடா சர்மா தமிழில், சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சார்லி சாப்ளின் 2 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தியில் 1920, பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது, மேன் டு மேன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X