முகம் முழுக்க கண்ணு.. ரெண்டு வாய்.. பார்க்கும் போதே பயந்து வருது.. அட்டகாசம் செய்யும் அடா ஷர்மா!
மும்பை: முகம் முழுக்க கண்களுடன் பிரபல நடிகை வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான அடா ஷர்மா, பள்ளிப் படிப்பை முடித்ததுமே இந்தி சினிமாவுக்குள் நுழைந்தார். 2008ஆம் ஆண்டு வெளியான 1920 படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.
தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் அடா ஷர்மா, தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஸ்பெஷல் அப்பீயரன்ஸ் கொடுத்தார்.

வெப் சீரிஸ்கள்
பின்னர் கடந்த ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். தொடர்நது இந்தியில் பைபாஸ் ரோடு, கமாண்டோ 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சினிமாக்களில் பிஸியாக இருந்த போதும் வெப் சீரிஸ்களின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் அடா ஷர்மா.

முடங்கியுள்ள சினிமா
கடந்த ஆண்டு மோ, தி ஹாலிடே ஆகிய இரண்டு வெப் சீரிஸ்கள் அவரது நடிப்பில் வெளியாயின. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக ஒட்டுமொத்த சினிமாவும் முடங்கியுள்ளது. இதனால் நடிகைகள் பலரும் வீட்டிலேயே உள்ளனர்.

ரசிகர்கள் பிஸி
அவ்வப்போது தங்களின் வித்தியாசமான வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை அடா ஷர்மாவும் தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்கள், வீடியோக்கள், நடனமாடும் வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார்.

முகம் முழுக்க கண்கள்
மேலும் தனது பழைய போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை அடா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள் வீடியோ ஒன்று பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதில் முகம் முழுக்க கண்களை கொண்டுள்ளார் அடா ஷர்மா.

டர்ராகிறது..
மொத்தம் 12 கண்கள், இரண்டு வாய்கள் பார்க்கும் திகிலூட்டுவதாக உள்ளது அந்த வீடியோ. அதில் தனது ஒரிஜினல் குரலில் பாடியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பார்க்கும் போதே டர் ஆகிறது என தெரிவித்துள்ளனர்.
அள்ளும் லைக்ஸ்
மேலும் சிலர், கண்கள் 12 உள்ளது, வாய் இரண்டு உள்ளது, ஆனால் மூக்கு மட்டும் ஏன் ஒன்றே ஒன்று உள்ளது என கேட்டு வருகின்றனர். அடா ஷர்மாவின் இந்த அச்சமூட்டும் வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











