ரெண்டு கைலேயும் ரெண்டு சிலம்பம்.. சுற்றி வளைத்த தெரு நாய்கள்.. தீயாய் பரவும் பிரபல நடிகையின் வீடியோ!
சென்னை: பீச்சில் இரண்டு கைகளிலும் இரண்டு சிலம்பங்களை சுற்றி அதிர விட்டுள்ளார் நடிகை அடா ஷர்மா.
பாலிவுட் நடிகையான அடா ஷர்மா, இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அறிமுகமானார்.

சார்லி சாப்ளின் 2
அதனை தொடர்ந்து சார்லி சாப்ளின் 2 படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை அடா ஷர்மா, அரைகுறை உடையில் போஸ் கொடுப்பது, கன்னாபின்னாவென உடம்பை வளைத்து யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்வது என உள்ளார்.

தற்காப்பு பயிற்சி
அதோடு தற்காப்பு பயிற்சிகளை மேற்கொள்வது, இசைக்கருவிகளை மீட்ட கற்றுக்கொள்வது, நடனமாவடுவது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றி வருகிறார்.

கொரோனாவே போ
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கையில் பாக்ஸிங் க்ளவுஸ் அணிந்து போட்டோ ஷூட் நடத்தினார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்த அடா ஷர்மா, அந்த போட்டோவுக்கு கொரோனாவே போ என கேப்ஷன் கொடுத்தார்.

எப்படி போகும்?
இதேபோல் வாளை வீசியும் நடிகை அடா ஷர்மா கொரோனாவை விரட்டினார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி விரட்டினால் எப்படி கொரோனா போகும் என கேட்டு வந்தனர்.

சிலம்பம் சுற்றி
இதனை தொடர்ந்து பியானோ வாசிப்பது, புல்லாங்குழல் ஊதுவது என தனக்கு ஆர்வமுள்ள வேலைகளை செய்து வந்தார் அடா ஷர்மா. இந்நிலையில் பழங்கால ஸ்டைலில் சேலை கட்டியுள்ள நடிகை அடா ஷர்மா கடற்கரையில் இரண்டு கைகளிலும் இரண்டு சிலம்பங்களை வைத்தது சுழன்று சுழன்று சுற்றுகிறார்.

கூட்டமாக வந்த தெரு நாய்கள்
அப்போது தெரு நாய்கள் கூட்டமாக வர அவற்றை கொஞ்சியதோடு அவற்றுடன் விளையாடுகிறார் அடா ஷர்மா. அடா ஷர்மாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னழகை காட்டும் செல்பி
இதனிடையே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து முன்னழகை காட்டி செல்பி எடுத்துள்ளார் அடா ஷர்மா. அடா ஷர்மாவின் இந்த போட்டோக்களும் வீடியாக்களும் வைரலாகி வருவதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











