இன்னொரு டிவி நடிகைக்கும் கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.. பீதி அடைய வேண்டாமாம்!
மும்பை: கொரோனா வைரஸால் இன்னொரு டி.வி. நடிகையும் பாதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ், உலகையே கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், இந்த வைரஸின் தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது.
இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் பலியாகிறவர்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,04,641 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை 3,59,860 பேர் குணமடைந்துள்ளனர். 2,26,947 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 17,834 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

ஊரடங்கு காரணமாக
கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். பல தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு சினிமா தொழிலாளர்களும் நடிகர், நடிகைகளும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நடிகர், நடிகைகளும் உள்ளாகி உள்ளனர்.

நடிகை நவ்யா சுவாமி
பிரபல பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனாவுக்கு உயிரிழந்தார். அவர் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான எம்.என்.ராஜம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றார். வாணி ராணி உட்பட சில டிவி தொடர்களில் நடித்த நவ்யா சுவாமிக்கு கொரோனா பாதித்துள்ளது. சில தெலுங்கு தயாரிப்பாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியில் சில நடிகர், நடிகைகளும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதிதி குப்தா சோப்ரா
இப்போது டிவி நடிகை அதிதி குப்தா சோப்ரா, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் இஷ்க்பாஸ் உட்பட பல டிவி தொடர்களிலும் வெப்சீரிஸில் நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'எனக்கு அறிகுறி ஏதும் இல்லை. வாசனை உணர்வை இழந்ததால், பரிசோதனை செய்தேன். பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆரம்பத்தில் மன அழுத்தம் இருந்தது.

பீதி அடைய வேண்டாம்
தியானம் மற்றும் பாசிட்டிவ் எண்ணங்கள் மூலம் நான் உடல் நலம் தேறி வருகிறேன். இன்னும் சில நாட்கள், என்னை தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். இப்போது, முகரும் சக்தியை திரும்பப் பெற்றுக்கொண்டேன். எனது குடும்பத்தினர் நன்றாகக் கவனித்துக் கொள்கின்றனர். கொரோனா வைரஸ் பாதித்தால் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











