விஜய் சேதுபதியுடன் ரொமான்ஸ் பண்ணும் போது.. குட்டி ஸ்டோரி குறித்து மனம் திறந்த நடிகை அதிதி பாலன்!
சென்னை: நடிகை அதிதி பாலன் குட்டி ஸ்டோரி படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படம் நேற்று வெளியானது. கவுதம் மேனன், நலன்குமாரசாமி, வெங்கட் பிரபு, ஏஎல் விஜய் ஆகிய 4 இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தனர்.
அதில் நலன் குமாரசாமி இயக்கிய ஆடல் பாடல் கதையில் விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் ஆகியோர் நடித்திருந்தனர்.

அதிதி பாலன் அனுபவம்
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த அதிதி பாலன், விஜய் சேதுபதியுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நல்ல காம்பினேஷன்
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், குட்டி ஸ்டோரி எனக்கு பிடித்ததற்கு காரணம், அந்த டீம் தான். நலன் குமாரசாமி - விஜய் சேதுபதி கூட்டணி சேர்ந்தால் நல்ல காம்பினேஷன் வரும். நலனின் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே தான் இந்தக் கதையில் பணியாற்ற முடிவெடுத்தேன்.

கொஞ்சம் பயமாக இருந்தது
மூன்று வருடங்களுக்கு பின்னர் தமிழில் நடிக்கிறேன். முதல் நாள் படப்பிடிப்பு கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி ரொம்பவே இயல்பாக இருந்தார். அவர் நிறைய சொல்லித் தருவார். படப்பிடிப்புக்கு இடையே நிறைய பேசுவோம். அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

கொஞ்சம் புரியாது..
அதேபோல் இயக்குநர் நலன் குமாரசாமி மிகவும் பொறுமையானவர். அவரது அணுகுமுறை மிகவும் மென்மையாக இருக்கும். சில நேரங்களில் அவர் பேசுவது கொஞ்சம் புரியாது. ஆனால் உற்று கவனித்தால் புரிந்துவிடும்.

அழுது விட்டேன்
நான் இதற்கு முன்பு ரொமான்ஸ் காட்சிகளில் அதிகம் நடித்ததில்லை. அதனால் விஜய் சேதுபதியுடனான ரொமான்ஸ் காட்சிகளில் கஷ்டமாக இருந்தது. அப்போது நான் கொஞ்சம் அழுதேன். அது அழக்கூடிய சீன் தான். இருந்தாலும் எனக்கு அழுகை வந்துவிட்டது.
Recommended Video

குட்டி ஸ்டோரி படம்
விஜய் சேதுபதி நடிக்கும் போதே நடிக்கிறாரா இல்லையா என்பதே தெரியாது. இவ்வாறு விஜய் சேதுபதியுடன் தான் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நடிகை அதிதி பாலன். அதிதி பாலன் மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழில் குட்டி ஸ்டோரி படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











