இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அதிதி ராவின் முன்னாள் கணவர்.. இனி சித்தார்த்திற்கு ரூட் கிளியர்!

சென்னை : நடிகை அதிதி ராவின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா, பிரபல நடிகையின் மகளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்திய அரச வம்சத்தை சேர்ந்த அதிதி ராவின் கொள்ளுத்தாத்தா அசாம் மாநில ஆளுநர் ஆவார். இவரது தாயார் வித்யா ராவ் கர்நாடக இசைப்பாடகியும் எழுத்தாளரும் ஆவார்.

1986ம் ஆண்டு பிறந்த அதிதி 2009 ம் ஆண்டு நடிகர் சத்யதீப் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

அதிதி ராவின் முன்னாள் கணவர்

அதிதி ராவின் முன்னாள் கணவர்

அதிதி ராவின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பல படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான விக்ரம் வேதா இந்தி ரீமேக்கிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் பாலிவுட் நடிகை நீனா குப்தாவின் மகளுக்கும் ஜனவரி 27ந் தேதி திருமணம் நடந்துள்ளது.

எளிமையான திருமணம்

எளிமையான திருமணம்

பிரபல சினிமா நடிகை மற்றும் தயாரிப்பாளர் , ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் பாலிவுட் நடிகை நீனா குப்பதாவின் ஒரே மகள் மாசபா குப்தாவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிதி, சித்தார்த் காதல்

அதிதி, சித்தார்த் காதல்

அதிதி ராவின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில், சித்தார்த்தை காதலித்து வரும் அதிதி ராவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒன்றாக ஒரே காரில் வந்து இறங்கியதால், இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல, தெலுங்கு நடிகர் சர்வானந்த்திற்கு ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தத்தில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர்.

ரூட் கிளியர்

ரூட் கிளியர்

கடந்த ஆண்டு அஜய் பூமதி இயக்கத்தில் உருவான மஹா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த், அதிதி ராவ் சேர்ந்து நடித்த போது காதலிக்க தொடங்கினார்கள். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட இருவரும் ஒரே காரில் சென்றனர். தற்போது, அதிதி ராவின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருப்பதால், சித்தார்த்தின் ரூட் கிளியராகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X