Aditi Rao Hydari: சித்தார்த்துடன் காதலா... அதிதி ராவ் கொடுத்த ரியாக்‌ஷன்... இப்படியும் ஒரு பதிலா!

சென்னை: பாலிவுட் முன்னணி நடிகை அதிதி ராவ், சினிமா தவிர வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

அதிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜுபிலி வெப் சீரிஸ் ஓடிடி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது.

இவரும் நடிகர் சித்தார்த்தும் ஜோடியாக சுற்றி வருவதால் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சித்தார்த்துடன் காதலா என்ற கேள்விக்கு அதிதி கொடுத்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

 Actress Aditi Rao Hydari opens up about her romance with Siddharth

சித்தார்த் காதல் - மனம் திறந்த அதிதி ராவ்:மலையாளத்தில் 2006ம் ஆண்டு வெளியான பிரஜாபதி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதிதி ராவ் ஹைதாரி. தமிழில் சிருங்காரம் என்ற படம் மூலம் அறிமுகமானாலும், காற்று வெளியிடை திரைப்படம் தான் மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழில் செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார் அதிதி. அதேபோல், சமீபத்தில் அதிதி நடிப்பில் வெளியான ஜுபிலி வெப் சீரிஸ் மூலம் ஓடிடி ரசிகர்களிடமும் செம்மையாக ரீச்சாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கும் ஹிராமண்டி என்ற சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சத்யதீப் மிஸ்ரா என்பவரை ரகசியமாக திருமணம் செய்திருந்த அதிதி ராவ் தற்போது சித்தார்த்துடன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளார். பாய்ஸ் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த் தெலுங்கு, இந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். 2003ம் ஆண்டு மேக்னா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சித்தார்த், 2007ல் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

 Actress Aditi Rao Hydari opens up about her romance with Siddharth

இதனையடுத்து சிங்கிளாக இருந்த சித்தார்த் தற்போது அதிதி ராவை காதலிப்பதாக சொல்லப்படுகிறது. அதிதியும் சித்தார்த்தும் பொது இடங்களில் ஒன்றாக வலம் வருகின்றனர். அதேபோல், பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன், ஏ.ஆர். ரஹ்மான் மகளின் திருமண நிச்சயதார்த்தம் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாகவே சென்றனர். மேலும், அடிக்கடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சித்தார்த்துடனான ரிலேஷேன்ஷிப் பற்றி அதிதியிடம் கேட்கப்பட்டது. அப்போது வெட்கப்பட்ட அதிதி, தனது வாயையும் பாதி முகத்தையும் மூடிக்கொண்டு கியூட்டாக ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார். அதிதியின் ரியாக்‌ஷனை பார்த்த நெட்டிசன்கள் மெளனம் சம்மதமா என அவரை கிண்டல் செய்து வருகின்றனர். இப்போதும் வெளிப்படையாக தங்களது காதல் பற்றி பேசாமல் ரியாக்‌ஷனோடு எஸ்கேப் ஆகிவிட்டார் அதிதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X