சூரி மீது 8 முறை தண்ணீர் கேனை வீசிய அதிதி.. என்ன சொல்லி தப்பிச்சிருக்காரு பாருங்க!

சென்னை : நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விருமன் படம்.

Recommended Video

Singam Puli Funny Speech | AJITH கோவப்படுவாருன்னு சொன்னாங்க | Viruman Press Meet *Kollywood

இந்தப் படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதையடுத்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கார்த்தி, அதிதி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு படத்தின் சுவாரஸ்யத்தை பகிர்ந்தனர்.

விருமன் படம்

விருமன் படம்

நடிகர் கார்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ள படம் விருமன். இந்தப் படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்தப் படத்தில் கார்த்தி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 கிராமத்து பெண்ணாக அதிதி ஷங்கர்

கிராமத்து பெண்ணாக அதிதி ஷங்கர்

கார்த்திக்கு ஜோடியாகியுள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவரது நடிப்பும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. முதல் படத்திலேயே இமேஜ் குறித்தெல்லாம் கவலைக்கொள்ளாமல் பக்காவான கிராமத்து பெண்ணாக அவர் களமிறங்கியுள்ளார்.

2வது முறையாக இணைந்த கூட்டணி

2வது முறையாக இணைந்த கூட்டணி

இந்தப் படத்தின் மூலம் கார்த்தியை இரண்டாவது முறையாக இயக்கியுள்ளார் பிரபல இயக்குநர் முத்தையா. இந்தக் கூட்டணி முன்னதாக கொம்பன் படத்தில் இணைந்திருந்தது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாகியிருந்தார் லக்ஷ்மி மேனன். ராஜ்கிரண் லஷ்மி மேனனின் அப்பாவாக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

விருமன் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அதிதி ஷங்கர், படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார். தான் இந்தப் படத்தில் ட்ரை சைக்கிள் ஓட்டியதாகவும் கோலம் போட்டதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 தண்ணீர் கேனை வீசிய அதிதி

தண்ணீர் கேனை வீசிய அதிதி

தொடர்ந்து தான் சூரி மீது 8 முறை தண்ணீர் கேனை வீசியதாக தெரிவித்த அதிதி, தான் இதை இயக்குநர் சொன்னதால்தான் செய்தேன் என்றும் தன்னை மன்னிக்கும்படியும் சூரியிடம் கேட்டுக் கொண்டார். சூரி செட்டில் இருந்தால் அந்த இடமே கலகலப்பாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வலியால் துடித்த சூரி

வலியால் துடித்த சூரி

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய சூரி, அதிதி தன் மீது தண்ணீர் கேனை 8 முறை வீசியதால் தனக்கு வலி ஏற்பட்டதாகவும் தொடர்ந்து செத்துப் போயிடுவேன் என்று சொல்லி தான் தப்பியதாகவும் குறிப்பிட்டார். தன்னை முதல் முறை பார்த்தபோதே அவர் நீண்ட நாட்கள் பழகியது போல தன்னிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.

 கடி ஜோக் சொன்ன அதிதி

கடி ஜோக் சொன்ன அதிதி

தொடர்ந்து சீரியசான காட்சியின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தன்னிடம் வந்து, சூரி சார், சனிக்கிழமைக்கு பிறகு ஏன் ஞாயிற்றுக் கிழமை வருகிறது என்று கேட்பார் என்றும் இதற்கான விடையை தான் சீரியசாக யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிதி, ஏன்னா அடுத்தநாள் திங்கட்கிழமை வருவதால்தான் ஞாயிற்றுக்கிழமை வருவதாக முடிப்பார் என்றும் சூரி தெரிவித்துள்ளார்.

சூர்யா தயாரிப்பு

சூர்யா தயாரிப்பு

விருமன் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களாக இந்தப் படத்தின் பிரமோஷன்கள் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கார்த்தி, அதிதி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு கலக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X