Aditi Shankar: குட்டி தேவதை அதிதி ஷங்கர் பிறந்தநாள் இன்று.. பிடித்தப் படம் குறித்து சுவாரஸ்யம்!

சென்னை: நடிகை அதிதி ஷங்கர் தமிழில் விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தவர். இன்றைய தினம் அதிதி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

முதல் படத்திலேயே நடிப்பிற்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதிதி. இந்தப் படத்தை கிராமத்து இயக்குநர் முத்தையா இயக்கியிருந்தார்.

Actress Aditi shankar celebrates her birthday today

கடந்த ஆண்டில் வெளியான விருமன் அதிதிக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ஜூலை 14ம் தேதி தமிழ், தெலுங்கில் ரிலீசாகவுள்ளது.

நடிகை அதிதி ஷங்கரின் பிறந்தநாள்: நடிகை அதிதி ஷங்கர், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன்தான் சினிமாவில் நடிக்கத் துவங்கினார். ஆனால் அவர் கார்த்தியுடன் நடித்திருந்த விருமன் படம் அவருக்கு சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. முதல் படத்திலேயே ஸ்டைலாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் கிராமத்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கிராமத்து பெண்ணாக, பாவாடை-தாவணியுடன் நடித்திருந்தார் அதிதி.

இந்தப் படத்தில் அவரது நடிப்பு, டான்ஸ் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தில் ஒரு பாடலையும் பாடி, சிறந்த பாடகியாகவும் ரசிகர்களிடையே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்திலும் நடித்துள்ளார் அதிதி. இந்தப் படத்திலும் அவரது பாடல் இல்லாமலா.. வண்ணாரப் பேட்டையிலே என்று சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து பாடியுள்ள பாடல் பட்டி தொட்டியெல்லாம் ட்ரெண்டாகி வருகிறது.

தெலுங்கிலும் பிரபல நடிகர் வருண் தேஜ் நடிப்பில் வெளியான படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் அதிதி. சிறுவயதில் இருந்தே தனக்கு பாடகியாக வேண்டும் என்பதே விருப்பம் என்றும் அந்த விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளதாகவும் அதிதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தன்னுடைய விருமன் படத்தில் பொறுப்பான பெண்ணாக நடித்திருந்தார் அதிதி. இந்த கேரக்டர் அனைவரையும் கவர்ந்த நிலையில், மாவீரன் படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

Actress Aditi shankar celebrates her birthday today

இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அதிதி. இதையொட்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது பேட்டியொன்றில் தனக்கு தனது அப்பா இயக்கிய படங்களில் சிவாஜி படம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தான் தியேட்டரில் மட்டுமே 6 முறை பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் டிவிடி, ஓடிடி என பல தளங்களிலும் படத்தை அதிகமான முறை பார்த்துள்ளதாகவும் தொலைக்காட்சியில் படத்தை விளம்பரத்துடன் போட்டாலும் தான் மிகவும் ஆர்வமாக படத்தை பார்ப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். படத்தில் தலைவர் நடிப்பு மற்றும் பிஜிஎம் உள்ளிட்டவை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இன்றைய தினம் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அதிதி ஷங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X