Aditi shankar: நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. அதிதி ஷங்கரின் வேற லெவல் டான்ஸ்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் முதல் முறையாக தமிழில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் மாவீரன். கடந்த 14ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
முன்னதாக விருமன் படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த அதிதி ஷங்கர், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், இந்திய அளவில் ஒரு வலம்வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சிறந்த பின்னணி பாடகியாகவும் உள்ளார்.

மாவீரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதிதி உற்சாகம்: பிரம்மாண்டங்களின் இயக்குநரான ஷங்கரின் இயக்கத்தில் அடுத்தடுத்து கமல் மற்றும் ராம்சரண் நடிப்பில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் உருவாகிவருகின்றன. இந்தப் படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தில் உள்ள நிலையில், வரும் பொங்கலையொட்டி இந்த இரு படங்களும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் துரிதப்படுத்தி வருகிறார் ஷங்கர்.
ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் தற்போது நடிகையாகியுள்ளார். கடந்த ஆண்டில் கார்த்தியுடன் இணைந்து அதிதி நடித்த விருமன் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே கிராமத்து கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் அதிதி. பிரம்மாண்டங்களின் இயக்குநரின் மகள், கதையை நம்பும் முத்தையா இயக்கத்தில் இணைந்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது. படமும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது அதிதி, நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார். கடந்த 14ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் ரிலீசான நிலையில், சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. படத்தில் பத்திரிகையாளராக, சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர். ஆனாலும் அவரது காட்சிகள் நீட்டிக்கப்பட்டிருக்கலாம் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

இந்தப் படத்தின் வெற்றி, படக்குழுவினர் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதே உற்சாகத்துடன் தனது அடுத்தப்படமான எஸ்கே21 படத்தின் சூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், மாவீரன் படத்தின் வெற்றி, தனக்கு எந்தமாதிரியான உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பதாக அதிதி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோவாக அது தெரிகிறது.
மாவீரன் படத்தின் ரெஸ்பான்சை கேட்டவுடன், தனுஷின் அமுக்கு துமுக்கு அமால் துமால் பாடலுக்கு ஆட்டம் போடுவதாக அந்த வீடியோவில் அதிதி காணப்படுகிறார். இந்த வீடியோவில், அதிதி தனது இயல்பான உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவருக்கு மற்றவர்களை போல நடிக்கத் தெரியவில்லை என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதேபோன்ற செயல்பாடுகளை தொடர்ந்து மெய்ன்டெயின் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











