குந்தவையாகவே மாறிய அதீதி ஷங்கர்.. கலக்கல் போஸ் என ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!

சென்னை : நடிகை அதீதி ஷங்கர் விருமன் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் அவர் இணைந்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் விருமன் படம் வெளியான நிலையில் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தனது முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார் அதீதி ஷங்கர். இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விருமன் படம்

விருமன் படம்

நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியானது விருமன். கொம்பன் படத்தில் இணைந்திருந்த கார்த்தி -முத்தையா கூட்டணியில் இந்தப் படம் வெளியானது. இரண்டு படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல்ரீதியாகவும் மிரட்டியது. விருமன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

கிராமத்துக் கதைக்களம்

கிராமத்துக் கதைக்களம்

படத்தில் கிராமத்து வாழ்வியலை மையமாக கொண்டு திரைக்கதை மற்றும் கதைக்களம் உருவாகியிருந்தது. தன்னுடைய அம்மாவின் மரணத்திற்கு காரணமான தன்னுடைய அப்பா, அதை உணரும் வகையில் கதை நாயகன் செயல்படுவதாக கதைக்களம் அமைந்திருந்தது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், மனோஜ், மைனா நந்தினி உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர்.

நாயகியாக அறிமுகமான அதீதி

நாயகியாக அறிமுகமான அதீதி

இந்தப் படத்தின்மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கர். அவரது துறுதுறுப்பான நடிப்பு படத்திற்கு வலு சேர்த்திருந்தது. முதல் படத்தில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற முனைப்பு இல்லாமல், சாதாரணமாக பாவாடை தாவணியில் இவர் நடித்திருந்தார்.

பாடகியாகவும் அறிமுகம்

பாடகியாகவும் அறிமுகம்

மேலும் இந்தப் படத்தின்மூலம் பாடகியாகவும் அறிமுகம் ஆகியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் அதீதி. இதனிடையே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குந்தவையாக மாறிய அதீதி ஷங்கர்

குந்தவையாக மாறிய அதீதி ஷங்கர்

நவராத்திரி ஸ்பெஷலாக அவர் அடுத்தடுத்து பாரம்பரிய உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்ளில் அவரது அழகு அள்ளுகிறது. இதனிடையே அப்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் குந்தவையாகவே மாறி போஸ் கொடுத்துள்ளார். த்ரிஷாவிற்கும் டப் கொடுத்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த அதீதி

ரசிகர்களை கவர்ந்த அதீதி

தன்னுடைய முதல் படத்திலேயே அழகான மற்றும் துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளார் அதீதி ஷங்கர். இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வரும் அவர் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X