Aditi shankar: அதிதி ஷங்கர் திருமணம்.. ஷங்கர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?
சென்னை: நடிகை அதிதி ஷங்கர் விருமன் படத்தின்மூலம் கடந்த ஆண்டில் கோலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் அதிதி ஷங்கர், சிறந்த பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறர். விருமன், மாவீரன் என இரு படங்களிலும் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றன.

அதிதி ஷங்கர் திருமணம் குறித்து ஷங்கர் போட்ட கண்டிஷன்: நடிகை அதிதி ஷங்கர் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன்தான் தமிழ் சினிமாவில் தன்னுடைய கேரியரை துவக்கினார். ஆனாலும் ஒரு நடிகையாகவும் பாடகியாகவும் அடுத்தடுத்த இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டில் கார்த்தியுடன் அதிதி இணைந்து நடித்த விருமன் படம் ரிலீசாகி அவருடைய அறிமுகப்படமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியானது மாவீரன் படம். இந்தப் படத்திலும் அதிதியின் ரோல் கவனத்தை பெற்றுள்ளது. இதையடுத்து அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் அதிதி. இந்தப் படத்தில் அதர்வா தம்பி ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். விஷ்ணுவர்தன் முன்னதாக கோலிவுட், பாலிவுட் என வெற்றிப் படங்களை கொடுத்துள்ள நிலையில், இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படமும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
அடுத்தடுதத படங்களில் கமிட்டாகி சிறப்பான வளர்ச்சியை காட்டி வருகிறார் அதிதி. மேலும் தன்னுடைய படங்களில் பாடல்களை பாடி, அவற்றையும் ஹிட்டாக்கி வருகிறார். சமீபத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் பாடியுள்ள வண்ணாரப் பேட்டையில பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. பலரும் இந்தப் பாடலை வைத்து ரீல்ஸ்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் விஷ்ணுவர்தன் படத்திலும் இவர் பாடல் பாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தன்னுடைய டாக்டர் படிப்பை முடித்துவிட்டுதான் சினிமாவில் நடிக்கத் துவங்கினார் அதிதி ஷங்கர். இந்நிலையில், இவருடைய திருமணம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது பிசியாக நடித்துவரும் அதிதிக்கு அவரது திருமணம் குறித்து ஷங்கர் தற்போது ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிதி எவ்வளவு படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளலாம் என்றும் அதன் பிறகு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றும் ஷங்கர் கூறியுள்ளாராம்.
தற்போது அதிதிக்கு 26 வயதாகிறது. கடந்த ஜூலை மாதத்தில்தான் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் இன்னும் இரு ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஷங்கரின் கண்டிஷனால் அதிதி குழப்பத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால் அதிகமான படங்களை அடுத்தடுத்து கமிட் செய்து நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த மொழிகளிலும் இவர் கமிட்டாவார் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











