ராம் சரணின் கேம்சேஞ்சர்.. புது போஸ்டர் மூலம் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்துள்ள படம், 'கேம் சேஞ்சர்'. இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். பான் இந்திய திரைப்படமாக இப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தனர். உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த இத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் தெரிந்த நடிகராக மாறினார் ராம்சரண். தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள கேம்சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார்.

படப்பிடிப்பில் தாமதம்: கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு பணி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கிய போது, படப்பிடிப்பில் நடந்த விபத்து, லைகா உடனான பிரச்சனையால் படப்பிடிப்பு தாமதமானதைத் தொடர்ந்து, ராம்சரண் படத்தை இயக்க தொடங்கினார். இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போதே, இந்தியன் 2 பிரச்சனை தீர்ந்ததால் அதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனால்,ஷங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம்சேஞ்சர் படத்தை இயக்கினார்.
படக்குழு அறிவிப்பு: இதனால்,கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.இதுவரை இப்படத்தில் இருந்து ஒரு பாடலைத் தவிர வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ந் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில்,இத்திரைப்படத்தின் டீசரை படக்குழு நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனது 50வது படம்: இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் பேசிய தில் ராஜூ, எனது 21 வருட தயாரிப்பு பயணத்தில் சேம்சேஞ்சர் எனது 50வது படம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் இந்த கதையை சொன்னபோது மிகவும் உற்சாகமாக இருந்தது. தற்போது இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படம் ஜனவரி 10ந் தேதி வெளியாக இருக்கிறது.இந்த படத்தை நானும் ஆதித்யாராம் மூவிஸ் ஆதித்யாராம் இணைந்து தயாரித்து இருக்கிறோம். இந்தப் படத்தைத் தொடர்ந்து இருவரும் தமிழ் மற்றும் பான் இந்தியா படங்களை இணைந்து தயாரிக்க இருப்பதாக தில் ராஜூ அதில் பேசினார்.


Click it and Unblock the Notifications











