6 நாள் நடந்த சூட்டிங்.. ரஜினி இருந்தாலே சைலண்ட்தான்.. மனசிலாயோ பாட்டு குறித்து பேசிய ஏஜெண்ட் டீனா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டு வருகிறது. அனிருத் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இதில் ரஜினிகாந்த் -மஞ்சு வாரியர் இணைந்து ஆட்டம் போட்டுள்ள மனசிலாயோ பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் கொரியோகிராப் செய்துள்ளார். அவருடன் இணைந்து விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டினாவும் இணைந்து செயல்பட்டுள்ள நிலையில் அவர் மனசிலாயோ பாடல் குறித்து அடுத்தடுத்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையின் படம் மற்றும் அதன் பாடல்கள் தான் தற்போது மிகப்பெரிய அளவில் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் மனசிலாயோ பாடல் வெளியான நிலையில் இந்தப் பாடல், மிகப்பெரிய வைபை ரசிகர்களிடையே கொடுத்துள்ளது. இந்த பாடலுக்கான ரீல்ஸ்களை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அடுத்தடுத்து சூப்பராக ஆட்டம் போட்டு வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை நளினி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ், சீரியல் நடிகை நட்சத்திரா மற்றும் அவரது கணவர் என அடுத்தடுத்து வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது.
மனசிலாயோ பாடல்: மனசிலாயோ பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கொரியோகிராப் செய்துள்ள நிலையில் விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனாவாக சிறப்பு கவனம் பெற்ற நடிகை வசந்தியும் இந்தப் பாடலுக்காக அவருடன் இணைந்து செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் கொடுத்துள்ள பேட்,டியில் இந்தப் பாடல் அடுத்தடுத்து ஆறு நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டதாகவும் இந்த பாடலுக்காக முன்னதாக நடிகை மஞ்சு வாரியர் ரிகர்சல் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். காலை துவங்கி நள்ளிரவு வரை இந்தப் பாடலின் சூட்டிங் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் வசந்தி பாராட்டு: இந்நிலையில் இந்த பாடலின் சூட்டிங்கின்போது நடிகர் ரஜினிகாந்த் செட்டில் இருக்கும்போது அனைவரும் சைலண்டாக அடுத்தடுத்த வேலைகளை செய்வார்கள் என்றும் அவர் செட்டைவிட்டு வெளியேறியவுடன் காச் மூச்சென்று சத்தங்கள் சூட்டிங் ஸ்பாட்டில் அதிகமாக காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பாடலுக்கான காஸ்ட்யூம்கள், அனைத்தும் முந்தைய நாள் மட்டுமே பிளான் செய்யப்பட்டதாகவும் ஏஜெண்ட் டீனா தெரிவித்துள்ளார். இந்த பாடலில் இசையமைப்பாளர் அனிருத்தும் ஆட்டம் போட்டுள்ள நிலையில் அவரது ஷூட்டிங் மட்டும் ஒரு நாள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
500 நடனக் கலைஞர்கள்: தினேஷ் மாஸ்டர் போட்ட ஸ்டெப்களை ரிகர்சல் மேற்கொண்டு அதை நடைமுறைப்படுத்தியதாகவும் வசந்தி கூறியுள்ளார். இந்தப் பாடலின் சூட்டிங்கின்போது அனைவரும் மிகப்பெரிய ஆக்டிவ்வில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் பாம்பே உள்ளிட்ட இடங்களில் இருந்து நடனக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு சூட்டிங் எடுக்கப்பட்டதாகவும் வசந்தி கூறியுள்ளார்.இந்தப் பாடலை நடிகர் ரஜினிகாந்த் ஒரே டேக்கில் ஆடி முடித்ததாகவும் வசந்தி உற்சாகம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











