போதை பொருள் வழக்கு.. ராகிணி, சஞ்சனாவை தொடர்ந்து மேலும் ஒரு ஹீரோயின் சிக்குகிறார்? பரபரப்பு தகவல்!

By

பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் மேலும் ஒரு நடிகைக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.

பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட டிவி நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அனிகாவிடம் நடத்திய விசாரணையில் அவர் கன்னட திரை உலகினருக்கு போதைப் பொருட்களை விற்றது தெரியவந்தது.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

இதற்கிடையே கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக புகார் கூறினார். இதையடுத்து அதைப் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகிணி திவேதி

ராகிணி திவேதி

இதையடுத்து போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்ட்ரிதா ராய்

ஆண்ட்ரிதா ராய்

இந்த வழக்கு தொடர்பாக, ஷேக் பாசில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர், இலங்கையில் உள்ள கேளிக்கை விடுதியின் கர்நாடக ஏஜெண்டாக இருக்கிறார். இந் நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் மற்றொரு கன்னட மற்றும் தெலுங்கு நடிகையான ஆண்ட்ரிதா ராயுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

இலங்கை செல்கிறேன்

இலங்கை செல்கிறேன்

இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், நான் இலங்கைக்கு செல்கிறேன். அங்கு நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்த சேக் பாசிலுக்கு நன்றி என்று கூறி இருந்தார். அந்த வீடியோவும் ஷேக் பாசிலுடன் சேர்ந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

ஆண்ட்ரிதா மறுப்பு

ஆண்ட்ரிதா மறுப்பு

இதனால் போதைப் பொருள் விவகாரத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஆண்ட்ரிதா ராய் இதை மறுத்துள்ளார். 'விளம்பர படம் ஒன்றில் நடிக்கவே இலங்கைக்கு சென்றேன். அங்குள்ள சூதாட்ட விடுதியில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தேன்.

Recommended Video

கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!
பிறந்தநாள் விழா

பிறந்தநாள் விழா

ஆனால் அங்கு ஷேக் பாசிலை நான் சந்திக்கவில்லை. பெங்களூரில் நடந்த எனது நண்பர் அர்பாஸ் கான் பிறந்தநாள் விழாவில் ஷேக் பாசில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவில் அவர் என் அருகே இருந்தார். அவ்வளவுதான்' என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவர் ஷேக் பாசிலுடன் எடுத்துக்கொண்ட கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X